மண்பானையில் சாதம் வடித்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

 மண்பானையில் சாதம் வடித்து சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும்...💚❤️தமிழ்நாட்டில் மண்பானைக்கு என்று தனி மரியாதை உண்டு. இன்றும் பொங்கல் பண்டிகையின் போது சிலர் தங்களது வீட்டில் மண்பானை கொண்டு பொங்கல் செய்வதுண்டு. வீட்டு விஷேசங்கள், கோவில் திருவிழாக்களில் மண்பானை பயன்படுத்தும் முறை இன்னும் சில இடங்களில் மாறாமல் உள்ளது. இப்போதைய காலத்தில் வீட்டு உபயோகத்திற்கு மண்பானை உபயோகப்படுத்தப்படாமல் போய்விட்டது. பீங்கான் மற்றும் உலோக பானைகளில் நாம் சமையலை சமைக்கிறோம். ஆனால் அது நமது உடலுக்கு நன்மை பயக்குமா? இல்லையா? என்பதை நாம் ஆராயவில்லை.


​மண்பானை சமையல்


கலாச்சார பழக்க வழக்கங்கள் மாறுவது என்பது இயல்பான விஷயம் என்றாலும் நமக்கு நன்மை பயக்கும் ஒரு பழக்க வழக்கத்தை மாற்றியமைக்க தேவையில்லை. அப்படி ஒரு பழக்க வழக்கமாகதான் மண்பாண்டம் கொண்டு சமைப்பது இருந்துள்ளது. ஆனால் மண் பாண்டங்கள் உடைந்து போகக்கூடியவை, பயன்படுத்த கடினமானவை என்பதால் மக்கள் உலோகத்திற்கு மாறிவிட்டனர். ஆனால் மண்பானை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.


அவை உணவிற்கு தனிச்சுவை அளிக்கின்றன. மண்பானையில் அரிசியை சமைப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. மண்பானையில் உணவை சமைக்கும்போது அது மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருப்பதை காணலாம். எனவே அனைத்து உணவு பிரியர்களும் மண்பானை குறித்து அறிந்துக்கொள்வது முக்கியமாகும்.


​சாதத்தில் உள்ள சத்துக்களை காக்கிறது


அரிசியானது எளிய கார்போஹைட்ரேட்களின் கலவையாகும். இது நமது உடலின் சமநிலைக்கும் இன்சுலின் மேலாண்மைக்கும் உதவுகிறது. ஆனால் நீங்கள் பீங்கான் அல்லது உலோக பாத்திரத்தில் அரிசியை சமைக்கும்போது அந்த பாத்திரங்கள் வெகுவாக சூடாகின்றன. இதனால் அவை அரிசியில் அகசிவப்பு வெப்பத்தை வெளியிடுகின்றன. அவை ஊட்டச்சத்துக்களை எரிக்கின்றன.


இதனால் அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைகின்றன. ஆனால் களிமண்பானையில் சமைக்கும்போது அவை ஊட்டச்சத்துக்களை அரிசியிலேயே தக்க வைக்கிறது. சொல்லப்போனால் உலோகங்கள் மற்றும் பீங்கான்களில் சமைக்கும்போது அரிசியில் நச்சுத்தன்மையை ஏறபடுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது


பானையில் சமைக்கபடும் உணவானது சீரான ஆரோக்கியமான உணவாக உள்ளது. எனவே பானையில் நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்பது மூலம் நம் உடலில் இன்சுலின் சமநிலையில் இருக்கும். மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இதனால் பானையில் சமைக்கப்படும் உணவானது நீரிழிவு நோயாளிகளுக்குக் நன்மை பயக்கிறது. நீங்கள் நிரந்தரமாக களிமண்பானைகளை பயன்படுத்த துவங்கும்போது நீங்கள் உங்களை ஆரோக்கியமாக உணரலாம். மேலும் இதில் உலோக நச்சுக்கள் இல்லாததால் இதில் உள்ள அதிக ஆற்றல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


​பி.ஹெச் அளவு


களிமண்பானைகள் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டவை என்பதால் அவை அமிலத்தன்மையை கையாள்கின்றன. இதனால் இது பி.ஹெச் நிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் பானையில் செய்யப்படும் சாப்பாடானது பி.ஹெச் அளவை நிர்வகிக்கின்றன.


​குறைந்த எண்ணெய்


களிமண்பானைகளானது உலோகங்கள் போல் அல்லாமல் வெப்பத்தை எதிர்க்கின்றன. இதனால் உணவு மெதுவாக சமைக்கப்படுகிறது. எனவே நீங்கள் மண்பானையில் சமைக்கும் உணவுகளில் குறைவான அளவில் எண்ணெய் சேர்த்தாலே போதுமானது. மண்பானைகள் நீங்கள் சிறிய அளவில் எண்ணெய் சேர்த்தாலும் அதை கொண்டு பானையை முழுவதும் ஈரப்பதமாக்குகின்றன. அதனால் மண்பானைகளில் சமைப்பதன் மூலம் உணவுகளில் எண்ணெய் அளவை குறைக்க முடியும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.


​சுவை


உலோக பாத்திரங்களை விடவும் மண்பானைகள் அதிக சுவையை உணவிற்கு அளிக்கின்றன. அதுவும் நமது இந்திய மசாலா பொருட்களுடன் பானையின் நறுமணம் இணையும்போது அது அதிகமான நறுமணம் மற்றும் சுவையை அளிக்கிறது. நம் முன்னோர்கள் மண்பானையை ஏன் பயன்படுத்தினார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. அப்போதைய காலங்களில் உலோக பாத்திரங்கள் அதிகம் கிடையாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் இப்போதும் மண்பானையை பயன்படுத்துபவர்களும் குறைவான அளவில் உள்ளனர்.


எனவே மண்பானையில் சமைக்கும் வாய்ப்புள்ள அனைவரும் மண்பானையை பயன்படுத்தவும். மண்பானை தவிர்த்து மற்ற மண் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் சமைக்க, தாளிக்க என அனைத்திற்கும் மண்பானையை பயன்படுத்தி அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,