பப்பாளி இலையின் நன்மைகள்.

 பப்பாளி இலையின் நன்மைகள்.
பப்பாளியின் பூர்வீகம் மெக்சிகோவாக இருப்பினும் தற்போது உலக நாடுகள் முழுவதும் விளைகிறது. பப்பாளி பழம் வருடத்தில் 9 மாதங்கள் கிடைப்பதுடன், விலை மலிவாகவும் இருப்பதால் இது ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.


இருபது ஆண்டுகள் கொண்ட பப்பாளி மரத்தில் இருந்து கிடைக்கும் அதன் அனைத்து பாகங்களும் மருத்துவ ரீதியாக பலன் கொடுக்க கூடியதாக இருக்கிறது. இதில் ஏராளமான கரோட்டின் சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளன.


மேலும், பதினெட்டு வகையான சத்துக்கள் பப்பாளியில் இருப்பது அதன் சிறப்பாகும். பப்பாளியில் கோவை பப்பாளி, பாங்காக் பப்பாளி, சிலோன் பப்பாளி, பிலிப்பைன்ஸ் பப்பாளி, வாஷிங்டன் பப்பாளி என பல்வேறு வகைகள் உள்ளன.அதையடுத்து, பப்பாளி இலைச்சாறு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.


பயன்கள்


பப்பாளி இலைச்சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து எந்த நோயும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


பருவநிலை மாறும்போது டெங்கு, மலேரியா, டைபாய்டு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இந்த நோய்களை குணப்படுத்த பப்பாளி இலை முக்கிய பங்கு வகிக்கிறது.


இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலையின் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.


பப்பாளி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்கப்படுகிறது.


பப்பாளி இலையில் நார்சத்து இருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.


வாயுத் தொல்லை, வயிறு மந்தம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு பப்பாளி இலை சிறந்த மருந்து.


பப்பாளி இலையில் சாறு எடுத்து தலை முடியின் வேரில் படும்படி தேய்த்து வந்தால் தலை முடி வளர்ச்சி சீராக இருக்கும்.


பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பப்பாளி இலையில் இருப்பதால் பொடுகுத் தொல்லை வராமல் பாதுகாக்கும்.


பப்பாளி இலையை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என கூறப்படுகிறது.


பப்பாளி இலையை நல்ல சுத்தமான நீரில் அலசி அதில் இருந்து சாறு எடுக்க வேண்டும்.


டெங்கு காய்ச்சல் இருக்கும்போது ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை பப்பாளி இலை சாறை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பருகுவது நல்லது.


தசை பிடிப்பு, மூட்டுவலி, போன்றவற்றிற்கும் பப்பாளி இலை சாப்பிடலாம்.


பப்பாளியில் பப்பைன் என்னும் வேதிப்பொருள் இருப்பதால், இயற்கையாகவே இறந்த செல்களை நீக்கி சருமத்தை பாதுகாக்கிறது. மேலும், வயதான தோற்றத்தை நீக்கி இளமையான தோற்றத்தை பப்பாளி ஜூஸ் கொடுக்கிறது.


பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.


பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.


யார், யார் சாப்பிடலாம்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாரளமாக சாப்பிடலாம்.


யார் சாப்பிட கூடாது


கர்ப்பிணிகள் பப்பாளி இலை சாறு எடுத்துக்கொள்ள கூடாது.


குறிப்பாக, கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்