தமிழகத்தின் சமூகநீதி மற்றும் ஜாதி எதிர்ப்பு போராளி#அய்யன்காளி

 

பிறந்தநாள் இன்று (28 August 1863, - 18 June 1941)



பெரியாரைப் போல -
கேரளாவின் சம நீதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டங்களில் முன்னணியில் நின்ற ஒரு ஆளுமை -
அய்யன் காளி ஆவார்.
நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் ஜாதிய கொடுமை உச்சத்தில் இருந்தது. அதை உருவாக்கியவர்கள் இந்து சனாதான பிராமணர்கள் .
அக்காலத்தில்-
பிராமணர்களிடமிருந்து- நாயர் பதினாறு அடி துாரமும் ஈழவர் முப்பத்திரண்டு அடி துாரமும் விலகி நிற்க வேண்டும்.
நாயரிடமிருந்து- ஈழவர் பதினாறு அடி துாரமும் புலையன் 32 அடி துாரமும் விலகி நிற்க வேண்டும்.
ஈழவனிடமிருந்து -புலையர் ஆறடி துாரமாவது தள்ளி நிற்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.
அய்யன் காளி பிறந்தது புலையர் சமூகத்தில் !
மாடுகளுக்கு பதிலாக புலையர்களை கட்டி உழும் கொடிய பழக்கம் நடைமுறையில் இருந்தது. தெருக்களுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது.
அய்யன்காளி அவற்றையெல்லம் எதிர்த்து கிளர்ச்சி செய்தார்.
அதோடு இல்லாமல் ஒடுக்கப்பட இன பெண்களுக்கு தோள் சீலை அணியும் உரிமையயும் போராடி பெற்றுத்தந்தார். அவர்களுக்கு என்று தனியே பள்ளிகள் இல்லாமல் இருந்த பொழுது அவர்களுக்கு பள்ளியை துவங்கினார். அதற்கு பல தடைகள் வந்த பொழுதும் தன்னுடைய நெஞ்சுரத்தால் அதை செயல்படுத்தினார். பிற பள்ளிகளில் தலித் பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்டதை கண்டதும் தொழிலாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். “எங்களின் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடமில்லை என்றால் உங்கள் வயல் வெளிகளில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று மக்கள் முழங்கவே அந்த கல்வி உரிமை கிட்டியது.
அவர் மக்கள் சபைக்கு கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“சாது சன் பரிபாலன சங்கம்” உருவாக்கி அதன் மூலம் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தார்.
அவரை காந்தி 'புலைய ராஜா”என்று அழைத்தார்.
அய்யன் காளி -பற்றிய புத்தகம் தமிழில் இருக்கிறது
படித்தால் பிரமிப்பும்..அவர்மேல் பெருமதிப்பும் கொள்வீர்கள்..!



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,