புளி , தக்காளி இல்லாமல் ரசம்

 

புளி , தக்காளி இல்லாமல் ரசம்

புளியே இல்லாமல் வித்தியாசமான சுவையில் மாங்காய் மற்றும் பருப்பு சேர்த்து மாங்காய் ரசம் செய்து பாருங்கள். இதற்கு புளியே தேவையில்லை. மாங்காய் மணமும் அதன் புளிப்பு சுவையும் அடடா…. அருமையான சுவை…


தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1
நெய் – 1 tsp
துவரம் பருப்பு – 1 tbsp
தக்காளி – 1 ( தேவைப்பட்டால் )
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய் – 1
கடுகு – 1/4 tsp
சீரகம் – 1/4 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
பெருங்காயம் – 1/4 tsp
வெல்லம் – சிறிய துண்டு
மிளகு சீராக பொடி – 1 tsp
உப்பு – தே.அ
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி தழை


செய்முறை :

முதலில் பருப்பு மற்றும் மாங்காய் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். சாம்பாருக்கு குழைய வேக வைப்பதுபோல் விசில் விடுங்கள்.

பின் கடாயில் நெய் விட்டு , கடுகு, சீரகம் , மஞ்சள் துள், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் தக்காளி, பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக மிளகு , சீரகப் பொடி சேர்க்கவும்.

நன்கு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள பருப்பு , மாங்காய் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். வெல்லமும் சேர்த்துவிடுங்கள்.

இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி தட்டுப்போட்டு மூடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.(அடுப்பை அணைக்கலனா .என்ன வாகும் உங்களுக்கே தெரியும்)
 அவ்வளவுதான் மாங்காய் ரசம் தயார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,