உணவின் கலோரி அளவை கணக்கிட உதவும் ஃபார்முலா

 உடல் எடையை குறைக்க நினைப்போர் உணவின் கலோரி அளவை கணக்கிட உதவும் ஃபார்முலா இதுதான்..! 


உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொதுவாக எடை இழப்புக்கான டயட் முறைகள் பற்றி தெரிந்திருக்கும் என்றாலும் ஒருவர் தாங்கள் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளில் கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வெகுவாக எடை இழப்பு ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. குறைந்த கலோரி உணவுகளை கொண்ட டயட்டை பின்பற்றுவது எடை இழப்பிற்கு உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு அர்த்தம் என்னவென்றால் குறிப்பிட்ட அளவு உடல் எடையை இழக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டிருப்பின், அவர்கள் கலோரி உட்கொள்ளலில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் கலோரி விஷயத்தில் அவர்கள் இலக்கிற்கு ஏற்ப தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு தினசரி தேவைப்படும் கலோரி அளவுகள் எவ்வளவு என்ற குழப்பம் ஏற்படும். எனவே உங்களுக்கு உதவ பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நான்சி டெஹ்ரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அதில் அளவான கலோரி எடுத்து கொள்வது எடை குறைப்பில் எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு தேவைப்படும் சராசரி கலோரி எவ்வளவு என்பதை எப்படி கணக்கிடுவது என்பதற்கான ஃபார்முலா உள்ளிட்டவற்றை பற்றிய தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார்.


பொதுவாக எடை குறைப்பு தேவைப்படாத ஆரோக்கியமான நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் தினசரி கலோரி உட்கொள்ளல் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 கலோரி மற்றும் ஆண்களுக்கு 2,500 கலோரி ஆகும். ஆனால் எடை குறைப்பில் இருப்பவர்களுக்கான டயட் என்பது தினசரி 1000 கலோரிகளுக்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. துவக்கத்திலேயே ஒரேடியாக கலோரி அளவை குறைக்காமல் சிறிது சிறிதாக குறைக்க வேண்டும்.


எடை குறைய குறைய தேவைக்கேற்ப உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளல் அளவை குறைத்தல் போதுமானது என்கிறார் நான்சி டெஹ்ரா. இதற்காக ஒருவர் செய்ய வேண்டியது அவர்களின் எடையை 26.4-ஆல் பெருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த ஃபார்முலா தோராயமான கலோரிகளுடன் உங்களை ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான போஸ்ட்டில் எடையை கிலோவில் எடுத்து கொள்ளுங்கள், பவுண்டுகளில் அல்ல என்று தெரிவித்து உள்ளார்.


தனது எடை இழப்பு பயணத்தை துவங்கும் ஒருவருக்கு (10+ கிலோவிற்கும் மேல் எடையை இழக்க முடிவு செய்திருந்தால்) இந்த ஃபார்முலா சிறப்பான பலனை தரும். இது கிட்டத்தட்ட கலோரிகளை சரியாக பராமரிக்க உதவுகிறது. இதனை பயன்படுத்தி வரும் கலோரி அளவு உங்களுக்கு அதிகமாக இருப்பதாக தோன்றினால் அதிலிருந்து 200-400 கலோரிகளை கழித்து கொள்ளுங்கள் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.


நீங்கள் ஒருவேளை சீரியல் டயட்டராக இருந்தால் இந்த ஃபார்முலா உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்காது. தவிர நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு தேவையான பராமரிப்பு கலோரிகளின் அளவு குறித்து தெரிந்திருந்தால் , தேவைப்படும்பட்சத்தில் அதிலிருந்து சுமார் 300 - 500 கலோரிகளைக் கழித்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,