ஸ்ரீ கிருஷ்ண உபதேசம்:

 ஸ்ரீ கிருஷ்ண உபதேசம்:

செல்வ செழிப்புடன் வாழ உதவும் 5 பொக்கிஷம்

வனவாசம் முடிந்து ஹஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்களுக்கும், தாய் குந்திக்கும், மனைவி திரௌபதிக்கும் ராஜா திருதிராஷ்டிரன் மற்றும் ராணி காந்தாரியும் அமோக வரவேற்பளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஹஸ்தினாபுர அரசராக பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரனுக்கு மன்னர் திருதராஷ்டிரன் மூடிச்சூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதற்கு முதல் நாள் இரவு யுதிஷ்டிரனை சந்தித்துப் பேசிய கிருஷ்ணர், வாழக்கையில் செல்வமும், செழிப்பும் பெற்று நாட்டை ஆள்வதற்கு தேவையான முக்கிய 5 பொக்கிஷங்களை பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
தண்ணீர்:
இந்து முறைப்படி, தண்ணீர் கொடுப்பது தெய்வபக்திக்கு நிகராக கருதப்படுகிறது. அதனால் தான் சூர்ய பகவானுக்கும், தேவிக்கும் தண்ணீர் வைத்து படையல் செய்கிறோம். அதோடு வீட்டிற்கு வரும் உறவினர்களை முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்கிறோம்.
சந்தனம் :
ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகள் சுற்றியிருந்தாலும் சந்தன மரம் தனது வாசனையை இழந்ததில்லை. அதேபோல் உன்னைச் சுற்றி எத்தனை தீமைகள் இருந்தாலும் வீட்டில் சந்தனம் இருந்தால் எந்த தீய சக்தியும் தாக்காது என்று ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடத்தில் கூறியுள்ளார்.
நெய் :
இந்து மதத்தில் பசு புனித விலங்காக போற்றப்படுகிறது. ஆகையால் அதன் பாலையும் பக்தியுடன் பயன்படுத்துகிறோம். பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் பயன்படுத்தி வீட்டில் உள்ள கடவுளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் கடவுள் நன்மையினை வழங்கி ஆசிர்வாதிப்பார்.
வீணை :
சரஸ்வதி தேவி வீற்றிருக்கும் தாமரை மலர், களிமண்ணில் இருந்து உருவானாலும் அதற்கும், தாமரைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. அதுபோன்று வீட்டில் சரஸ்வதியின் உருவச் சிலை அல்லது, அவரது இசைக்கருவியான வீணையை வைத்திருந்தால் வறுமை பிடிக்காது.
தேன் :
கிருஷ்ணரின் கணக்குப்படி, தேன் ஒரு சுத்தமான ஒன்று, அது மனிதர்களின் எண்ணம், ஆன்மாவைத் தூய்மைப்படுதுவதுடன் வீட்டில் தூய ஒளிப்பரவச் செய்யும். தேனிடத்தில் இருக்கும் தூய சக்தி வீட்டில் உள்ள எத்தகைய தீங்கையும் அழித்துவிடும் என்றுக் கூறியுள்ளார்.

அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரது பரிபூரண அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் !
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்
வாழ்த்துகள்
!
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்