பாராட்டுவோம் அந்த தங்கமகனை



 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற  நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் : 

(07.08.2021)


===*===*====


 தனியொரு மனிதனாய் வென்று சாதனை


 தங்கப்பதக்கம் பெற்று பெற்றாய் உயர்வினை


 நீரஜ் சோப்ராவால் ஈட்டி எறிதல் விளையாட்டு 


 நினைவில் இருக்கும் நாளே ஏழு ஆகஸ்டு


 இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு கொண்டாட்டம்


 இருபத்தொரு வயது இளைஞனின் வெறியாட்டம்


 ஜப்பானின் தலைநகரில் இந்தியன் நிமிர்ந்தான்


சரித்திரத்தில் தனியிடம் நீரஜ் சோப்ரா அடைந்தான்


 உலக ஒலிம்பிக்கில்  தங்கம் கிடைத்தது என்ற நிம்மதி


 நல்லுழைப்பாளிக்கு ஒலிம்பிக் கொடுத்த வெகுமதி


 தேசிய கீதம் ஒலித்தது டோக்கியோ நகரில்


 இத்தேசம்  நூறாண்டுக்கு பின் கேட்டது பெருமையில் 


 இன்னாளில்  பாராட்டுவோம்  அந்த தங்கமகனை


 இந்தியருக்கு பெருமை சேர்த்த  நீரஜ் சோப்ராவினை


 முருக.சண்முகம்

 சென்னை- 56


**********


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி