#கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!
இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' #கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!
கலைஞர் துயில் கொள்ளும் இடம் அவர் போராடி பெற்றது என்று பேரவையில் துரைமுருகன் புகழாரம் கூறியுள்ளார். அண்ணாவுக்காக அந்த இடத்தை ஒதுக்கியவர் கலைஞர் என அவர் தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது. என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் எனவும் கூறினார்
Comments