அதிபர் பதவிக்கு பிடன் சரியில்லை: கமலா பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்:

 

அதிபர் பதவிக்கு பிடன் சரியில்லை: கமலா பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்:









நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ளனர். முக்கியமாக ஜனநாயக கட்சியை சேர்ந்த சிலரே கமலா ஹாரிஸ் பதவிக்கு வரலாம் என்று கருத தொடங்கி உள்ளனராம். இது தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பும் வெளியாகி உள்ளது.

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடத்தப்படும். இதை ஆங்கிலத்தில் approval rating என்று அழைப்பார்கள். ஒரு அதிபர் எப்படி ஆட்சி நடத்துகிறார், அவரின் திட்டங்கள் சரியாக இருக்கிறதா, அவரை ஆட்சி முறையை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பது இந்த approval rating மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும்.
பொதுவாக approval rating 50 சதவிகிதத்திற்கும் கீழே சென்றால் அந்த அதிபரின் ஆட்சியை மக்கள் வெகுவாக விரும்பவில்லை என்று அர்த்தம். அதிபர்களும் approval rating 50க்கும் கீழே செல்லாத வகையில் பார்த்துக்கொள்வார்கள். ஒரு அதிபர் மீண்டும் தேர்தலில் நிற்பது கூட இந்த approval rating அடிப்படையே முடிவு செய்யப்படுவது வழக்கம். மக்களின் ஆதரவு குறைவாக இருந்தால் பொதுவாக அதிபரை மீண்டும் மறுதேர்தலை சந்திக்க கட்சிக்குள் அனுமதி வழங்கப்படாது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது அமெரிக்க அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர்களுக்கான approval rating கருத்து கணிப்புகளை துல்லியமாக வெளியிடும் Rasmussen Reports அமைப்பு அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்கான் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக அந்த கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


அதன்படி அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும். அங்கு தாலிபான்கள் வெற்றி பெற்றதும் இந்த ஆதரவு குறைய காரணமாக பார்க்கப்படுகிறது. 54 சதவிகிதம் பேர் பிடனுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பிடன் வெளியேற்றிய விதம் தவறானது. அவர் தவறு செய்துவிட்டார். அவர் வலிமையான அதிபராக செயல்படவில்லை என்று இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். முக்கியமாக ஆப்கான் படைகள் வலிமையானது என்று பிடன் தவறாக கருத்து தெரிவித்துவிட்டார். அவர் தனது அரசியல் கணிப்பில் தோல்வி அடைந்துவிட்டார், உளவுத்துறையை சரியாக பயன்படுத்தவில்லை என்று கணிப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

பிடனின் மக்கள் ஆதரவு இதற்கு முன் ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய மூன்று அமெரிக்க அதிபர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது. ஜார்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப் ஆகியோருக்கு மக்கள் கொடுத்த ஆதரவை விட பிடனுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு குறைவாகும். அதோடு பிடன் அதிபராக பதவி ஏற்றபின் பெறும் மிக குறைந்த approval rating இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக அவரின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது முன்னாள் அதிபர் டிரம்ப்தான். ஆனால் அவருக்கே கூட இவ்வளவு மோசமான செல்வாக்கு இருந்தது கிடையாது.

மாறாக துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 43 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.அதிபர் பிடனை விட இவருக்கான ஆதரவு 3 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இவரை ஆதரிக்கும் மக்கள் சதவிகிதம் கடந்த சில மாதங்களாக உயர தொடங்கி உள்ளது. இவரின் கடுமையான ராணுவ கொள்கைகள், ஆயுத ஆதரவு காரணமாக இப்படி இவருக்கான செல்வாக்கு உயர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது பிடனை விட இவருக்கான ஆதரவு குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் மக்கள் இவரை அதிகம் ஆதரிக்க வாய்ப்புள்ளதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

முக்கியமாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ளனர். இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை. பிடன் பதவி விலகுவது எல்லாம் வாய்ப்பே இல்லாத விஷயம். ஆனாலும் வேறு ஏதாவது பெரிய பிரச்சனை ஏற்படும் சமயத்திலோ அல்லது அடுத்த மறுதேர்தலிலோ பிடனுக்கு பதிலாக தமிழ் பெண்ணான கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புகள் ஏற்படும். பிடன் பதவிக்கு வந்த போதே கமலா ஹாரிஸ் விரைவில் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. பிடன் 4 வருடம் அதிபராக இருப்பது கொஞ்சம் சந்தேகம் என்று அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் அவருக்கான approval ரேட்டிங்கும் வேகமாக சரிந்து வருகிறது.பிடனின் approval rating தொடர்ந்து சரிந்தால் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியில் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அந்த லக் அவருக்கு இருக்கிறதா என்று போக போகத்தான் தெரியும்.
l

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,