தொடைக் கொழுப்பைக் குறைக்க வேண்டுமா..? இந்த எளிய பயிற்சிகளை செய்யுங்கள்...

 தொடைக் கொழுப்பைக் குறைக்க வேண்டுமா..? இந்த எளிய பயிற்சிகளை செய்யுங்கள்... 



உடலில் அதிகமாக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பிட்னஸ் சீக்ரெட். கொழுப்பு அதிகம் சேர்ந்தால் பிரச்சனைகள் கூடவே வந்துவிடும். கொழுப்பு அதிகம் சேரும் இடத்தை பொறுத்து பிரச்சனை இருக்கும். வயிறு, கால் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொழுப்பு சேரும். இதனை குறைக்க வேண்டும் என்றால் சரியான உடற்பயிற்சியை பின்பற்றினால் போதும். உதாரணமாக தொடைப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்கிறதென்றால், பிரத்யேகமான உடற்பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும்.


சிலருக்கு ஒரு கேள்வி எழ வாய்ப்புள்ளது. எப்படி தொடையில் இருக்கும் கொழுப்பை மட்டும் குறைப்பதற்கு பயிற்சி இருக்கும்? என கேட்கலாம். உண்மையை சொல்ல வேண்டுமானால், உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அனைத்து பகுதிகளில் இருக்கும் கொழுப்பும் ஒரே சீராக குறையும். பிரத்யேகமான பயிற்சி என்றால், அந்த இடம் விரைவாக கொழுப்பு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரி, தொடையில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கான பிரத்யேக பயிற்சிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.


1.ஸூமோ ஸ்குவாட்ஸ்


இந்த பயிற்சி, வகுப்பறைகளில் அடிக்கடி ஆசிரியர்கள் கொடுக்கும் பனிஷ்மென்ட் தான். Char பனிஷ்மெண்ட். அதாவது, நேராக நின்று கால்கள் இரண்டையும் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு அகலமாக விரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கைகள் இரண்டையும் முன்பக்கமாக நேராக நீட்டிக்கொள்ளுங்கள். அதேநிலையில், அமருங்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, நாற்காலி இல்லாமல் அந்தரத்தில் அமர்ந்துபோல் இருப்பீர்கள். நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.


2. ஃபார்வேர்டு லங்ஸ்


நேராக நின்று கொண்டு, இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள். இடது காலை முன்பக்கமாக மடக்கியவாறு ஊன்றி இடுப்புயரத்தில் அமர வேண்டும். அப்போது, வலது காலை பின்பக்கமாக நீட்டி, பெருவிரலில் பேலன்ஸ் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரக்கணக்கிற்கு பிறகு வலது காலை முன்பக்கமாக ஊன்றி, இடது காலை பின்பக்கமாக நீட்டிக்கொள்ள வேண்டும். இடுப்பு மற்றும் கால் தொடைப்பகுதிக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி.


3. ஜம்பிங் ஜாக்ஸ்


இரண்டு கால்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் விரித்து வைத்துக்கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இரு கைகளையும் ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, ஜம்ப் செய்யுங்கள். நீங்கள் குதிக்கும்போது கைகள் இரண்டும் மேல்நோக்கி நேராக நீட்டிக்கொள்ள வேண்டும். நிலத்தை கால்கள் தொடும்போது கைகளையும் இறக்கிக்கொள்ள வேண்டும். வேக வேகமாக குதித்து உடற்பயிற்சி செய்யலாம்.


4. டெட் லிஃப்ட்


வெயிட் லிஃப்டிங் மூலம் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. அதிக எடையுடன் கூடிய வெயிட் லிப்டரை வைத்துக் கொள்ளுங்கள். கால்களை மடித்து, அந்த வெயிட்லிப்டரை தூக்க முயற்சி செய்யுங்கள். கால் மற்றும் இடுப்பு பகுதிக்கு முழு வெயிட்டும் இறங்குமாறு வெயிட்டை தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். அப்போது, தொடைப் பகுதியில் இருக்கும் கொழுப்புகள் வேகமாக கரைந்துவிடும். ஒரீரு வாரங்களில் உங்கள் கால்கள் ஸ்லிம்மாக காட்சியளிக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,