கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழ்நாடு… முதல் “பெண்” ஓதுவார் நியமனம்!

 கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழ்நாடு… முதல் “பெண்” ஓதுவார் நியமனம்!




கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழ்நாடு… முதல் “பெண்” ஓதுவார் நியமனம்!
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். இயற்கையாக வரும் மாதவிடாய் என்ற ஒன்றை காரணம் காட்டி இச்சமூகத்தில் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, தனிமனித சுதந்திரம் என அனைத்தையும் குத்தகைக்கு எடுத்திருந்தது இந்தச் சமூகம். தன்மானம், சுயமரியாதை என அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நின்றார்கள். ஆனால் சமூகத்தின் இந்த சீழ்படிந்த மனநிலையை சீர்திருத்த அவ்வப்போது புரட்சியாளர்கள் தோன்றுவார்கள். அதனால்தான் அவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள்.
கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழ்நாடு... முதல் "பெண்" ஓதுவார் நியமனம்!
பெண்களுக்காக குரல் எழுப்பினார்கள். வாய்மை வென்றது. உரிமைகள் படிபடியாகக் கிடைத்தது. இருப்பினும் ஆண் சமூகம் பெற்ற தன்னிறைவை எட்ட முடியவில்லை. அதற்கு இன்னும் பல யுகங்கள் ஆகலாம். இருந்தாலும் அத்திபூத்தாற் போல ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சுய மரியாதையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும் சில திட்டங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் கருவறைக்குள்ளான தீண்டாமையை உடைத்தெறியும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த முன்னெடுப்பை செய்துள்ளார். கருவறைக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்ற நிலையை பெரியார் மிகக் கடுமையாக் எதிர்த்தார்.
அவர் வழிவந்த கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தை நிறைவேற்றினார். சட்டம் இயற்றினாலும் அந்தச் சட்டத்தால் புண்பட்ட சிலரால் நிறைவேற்ற முடியாமல் போனது. இடையில் அதிமுக ஆட்சி வேறு வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திருப்பதால் அச்சட்டத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார் ஸ்டாலின். தந்தை பெரியாரின் கனவையும் தந்தையின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். அவர்கள் காணாத கனவையும் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பது தான் கூடுதல் ஸ்பெஷல்.
ஓதுவார் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காஞ்சிபுரம் பெண் சுஹாஞ்சனா..!
தனது ஆட்சியின் 100ஆவது நாளான நேற்று ஸ்டாலின் அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், பொதுப்பிரிவை சேர்ந்தவர் ஒருவர். இதைக் காட்டிலும் கவனம் பெற்றது பெண் ஒருவருக்கு ஓதுவார் பணியாணை வழங்கியது தான்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,