உங்க உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா

 உங்க உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா !! அப்ப இந்த ஐந்து பழங்களா தினமும் சாப்பிட்டாலே போதும் !! இதோ உங்களுக்கான தகவல் !!!

நம் அனைவருக்கும் ஆரோக்கியமாக உடல் கட்டமைப்புடன் இருக்க வேண்டும் ஆசை இல்லாமல் இருக்காது. அந்த வகையில் பருத்து குண்டாக இருக்கும் பலர் அந்த உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் அழிப்பதில்லை . இந்நிலையில் இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை.ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். உடல் எடை குறைக்கும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் எடைக் குறைப்பு ஆரோக்கியமானதாக இருக்கும். அதற்கு ஒரு சில உலர் பழங்களை பெரிதும் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவது உங்கள் பசியையும் போக்குகிறது. அவை மிகக் குறைந்த கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதோடு விரைவான எடை இழப்புக்கு உதவும். சுவாரஸ்யமாக, அவை தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவுகின்றன.நீங்கள் பசியுடன் இருக்கும்போது திராட்சையும் சாப்பிடலாம். அவை மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளன. அதோடு திராட்சையில் பசியை அடக்கும் பண்புகள் உள்ளன. எனவே அவை பசி ஹார்மோனை (கிரெலின்) விரட்டாமல் வைத்திருக்கின்றன. அவை உடலில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்கின்றன. அத்துடன் தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.முந்திரி ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியதாகும். உடல் எடையை குறைக்க அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க டயட் திட்டமிடும் போது முந்திரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், முந்திரியில் புரதமும் இருப்பதால் எடை இழப்புக்கு கூடுதல் பலம்.வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை உடலில் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன. வேர்க்கடலையை சாப்பிடுவது உடலுக்கு வலிமையைக் கொடுக்கிறது . எடை இழப்பிற்கும் உதவுகிறது.பசியுடன் இருக்கும்போது வால்நட் சாப்பிட்டால், அது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசியில்லாமல் பார்த்துக்கொள்ளும். வால்நட் மூளையில் இருக்கும் இரசாயன செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. இது பசியின் உணர்வை குறைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்த வால்நட்ஸ் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,