சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (3)
சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (3)
இன்று,
ஜெமினி மேம் பாலம் கீழுள்ள இந்த குதிரை வீரன் சிலை.
அக்காலத்தில், குதிரைகளை ரேஸ் குதிரையாக வளர்த்து, பந்தயத்தில் ஈடுபடுத்தி அதற்கு பெரும் செல்வம் பரிசாக தரப்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த சூதாட்டம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் தான் இது அதிகம் நடைபெற்றது.
இந்த சூதாட்டத்தில் அதிக பொருட்களை இழந்தது சாமான்ய மக்களே.
இந்த சூதாட்டத்தில் சாமான்யர்களும் பெரும் செல்வந்தர்களும் சினிமா நட்சத்திரங்களும் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களுடைய சொத்துக்களை இழந்தனர்.
இக்காலத்தில் மதுவின் சீரழிவு எப்படி இருக்கிறதோ அதே போல் அந்த காலத்தில் குதிரை பந்தயத்தில் சீரழிவு இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.
அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருந்தாலும் பின்னாளில் அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள் நீதிமன்றமும் குதிரை பந்தயம் சூதாட்டம் அல்ல என்று தீர்ப்பு அளித்தது.
இன்று வரையிலும் குதிரைப்பந்தயம் நடைபெறுகிறது.
நாளை வேறு ஒரு பாரம்பரிய இடம் பற்றி.
..
Comments