தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் அறிவிப்பு

 தன்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழக பாஜக  பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் அறிவித்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருபவர் கே.டி ராகவன், ஊடக விவாதங்களில் பங்கேற்று, மோடி அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுவதுடன், பாஜகவின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். இந்நிலையில்  இன்று காலை சமூக வலைத்தளத்தில் அவர் உடலில்  சட்டை அணியாமல் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 





அதில் கே.டி ராகவன் ஒரு  பெண்ணுடன் ஆபாசமாக வீடியோ சாட்டிங் செய்தார் எனக் கூறப்படுகிறது. கே.டி ராகவன் வீடியோ காலில் அப்படி நடந்து கொள்வது  பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும், என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும், நான் முப்பது வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றிய ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன், என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.




இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன், நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன், என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், சட்டப்படி இதை சந்திப்பேன், தர்மம் வெல்லும் என பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த வீடியோ வெளியான உடன் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேடி ராகவனை அழைத்து பேசியதுடன், நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தாகவும், அதைத் தொடர்ந்து கே.டி ராகவன் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தவறு யார் செய்தாலும் தவறுதான் எனவும் தவறு செய்தவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், பின்னணி என்ன என்று பாராமல் நடவடிக்கை எடுத்த அண்ணாமலைக்கு வழ்த்துக்கள் என பாஜக ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்ற

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,