13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னையில்

 இன்று செப்டம்பர் 23ஆம் நாள்.


 இதே நாளில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு சம்பவமே இன்றைய பதிவு.



 இப் பதிவினைப் படித்து முடிக்கும் எவரும் கண்கலங்காமல் இருக்க மாட்டார்கள்.


23. 9. 2008  அன்று நண்பகல் 12. 30 முதல் பிற்பகல் 3.30 வரை


 தமிழக மக்களை, குறிப்பாக,, சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்த உண்மை சம்பவம்


 செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியில் வசிப்பவர்கள் திரு அசோகன் மற்றும் திருமதி புஷ்பாஞ்சலி தம்பதிகள்.


 இவரது மகன் ஹிதேந்திரன் என்பவர் 


 தனது வீட்டில் இருந்த இருசக்கர மோட்டார் வாகனத்தை எடுத்து வெளியில் சென்ற ஹிதேந்திரன் விபத்துக்குள்ளானார். செய்தி அறிந்த பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியுடன் துடித்தனர். இந்த எதிர்பாராத சம்பவம் மிகவும் வேதனை அளித்தது.


 செங்கல்பட்டு மருத்துவமனையில், முதல் சிகிச்சை செய்து,  பின்னர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 பலத்த காயமுற்ற ஹிதேந்திரனுக்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.


 சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது தந்தையிடம், விபத்தின் தலையில் பலத்த அடிபட்டதன்  காரணமாக உங்களது மகனுக்கு மூளை செயலிழந்து விட்டதாகவும், அதேசமயம் இதயம் நன்றாக சீராக இயங்குகிறது என்றும் தெரிவித்தனர்.


 பெற்ற பிள்ளையின் நிலை இப்படியாகிவிட்டதே என வருத்தப்பட்டு இருந்தாலும், அதே கணம் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாகவும் முடிவு செய்தனர் பெற்றோர்கள்.


 இவரது கருத்தினை சற்றும் எதிர்பாராத அப்பல்லோ மருத்துவர்கள் கலந்து ஆலோசனை செய்தனர்.


 அவ்வமயம், அண்ணா நகர் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபிராமி என்ற சிறுமிக்கு, அவரது இதயம் மிகவும் பழுதடைந்த நிலை உள்ளதாகவும், உடன் மாற்று இருதயம் பொறுத்தப்பட்டால், எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் அறிவித்துள்ளனர் என்றும் நம் மருத்துவமனைக்கும் அந்த தகவல் வந்துள்ளதாகவும். இந்நிலையில் ஹிதேந்திரன் நிலையினை அறிந்து இவரது  இதயம் பொருத்தினால் அச்சிறுமி நலம் அடைய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எண்ணினர்.


 கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த சேகரன் மஞ்சுளா தம்பதிகளின் மகள்தான் அந்த சிறுமி அபிராமி.


 அப்போலோ மருத்துவர்கள், ஹிதேந்திரன் தந்தை, தன் மகனின் உடல் உறுப்பினை தானம் செய்வதாக ஒப்புக் கொண்டதன் பெயரில், ஹிதேந்திரனின்  இதயத்தினை அபிராமி என்னும் சிறுமிக்கு பொருத்தலாம் என முடிவுக்கு வந்தனர்.

 இந்த தகவல், அண்ணாநகரில் உள்ள மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது.


 இதற்கிடையில், ஹிதேந்திரனின் இதயத்தை உரிய நேரத்தில் எடுத்து செல்வதற்காக, போர்க்கால அடிப்படையில் என்று சொல்வார்களே, அந்த துரித வேகத்துடன், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை உயர் அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் நடவடிக்கை எடுத்திட சீரிய திட்டமும், உரிய வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது



23.09.2008 அன்று நண்பகல் 12.30  மணிக்கு துரித செயல்திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையில் இச்சம்பவம் அன்று பரபரப்பாக இருந்தது.


 சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து, துடிதுடித்த ஹிதேந்திரனின்  இதயம் பத்திரமாக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, வாகனம் அதிவிரைவாகவும், போகும் வழியில், எந்தவித இடையூறும் இல்லாமல், முன்கூட்டியே திட்டமிட்டபடி. பொதுமக்களின் வாகனங்கள்  அனைத்தும்  தடைசெய்யப்பட்டு 13 நிமிடத்திலேயே சென்னை முகப்பேர் மருத்துவமனைக்கு பத்திரமாக சென்றடைந்தது. ஏற்கனவே, ஆபரேஷன் தியேட்டரில், அபிராமி என்னும் சிறுமிக்கு சிகிச்சை தொடர்ந்து இருந்தபோது எதிர்பார்த்த  நேரத்திற்குள்  ஹிதேந்திரனின்  இதயம் வந்துவிடவே, அச்சிறுமிக்கு, டாக்டர். செரியன் அவர்களால் வெற்றிகரமாக மாற்று இருதயம் பொருத்தப்பட்டு முடிக்கப்பட்ட போது  பிற்பகல் 3.30 மணி.


 பெங்களூர் தம்பதிகளான, சேகரன் மஞ்சுளா ஆகியோருக்கு. தங்கள் மகளுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, இருந்தாலும் இந்த நிகழ்வால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.



 அதேசமயம், திருக்கழுக்குன்றம் மருத்துவர் அசோகன் புஷ்பாஞ்சலி தம்பதிகள் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல எவராலுமே  இயலாது என்றாலும், தன் மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்பை தானம் செய்த அந்த நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்


 அதன்பிறகுதான், இதுபோன்ற விபத்துகள் நேரிடும் பட்சத்தில் மூளை செயலிழந்த நபர்களின், உடல் உறுப்புகளை தானம் தருவது, அவரவர்களின் உறவினர்களின் சம்மதத்தின் பேரில் இன்று வரை நடைமுறை செயலாக உள்ளது. அதற்கு முன்னுதாரணமாய் இருந்தவர்கள் திருக்கழுக்குன்றம் அசோகன் புஷ்பாஞ்சலி தம்பதிகளே.


 இவர்களை நினைக்கையிலே, மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பாத்திரம் நிச்சயம் ஞாபகம் வரும் 


 இக்கலியுகத்தில் கர்ணனாய் வாழ்ந்துவருகிறார் ஹிதேந்திரன்.



 முருக.சண்முகம் சென்னை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,