‘16 வயதில் கொடி பிடித்தேன்’

 ‘16 வயதில் கொடி பிடித்தேன்’



16 வயதில் கொடி பிடித்தேன்’’ நெப்போலியனின் சினிமா, அரசியல் அனுபவங்கள்.

‘‘நான் 16 வயதிலேயே தி.மு.க. கொடி பிடித்தேன். எங்க மாமா நேருவுக்காக தேர்தல் வேலைகளை செய்தேன். அவர் 1989 தேர்தலில் வெற்றி பெற்று மின்சாரத்துறை அமைச்சர் ஆனதும் அவருக்கு உதவியாளராக சேர்ந்தேன். அங்கே 2 வருடங்கள் வேலை செய்தேன்.‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நெப்போலியன் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். தெரியாத சில தகவல்களை அவர் தெரிவித்தார்.

அப்போதுதான் என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. ‘உதயம்’ படம் பார்த்துவிட்டு, அந்த படத்தின் ஹீரோ மாதிரி இருக்கிறாய்...நீ சினிமாவுக்கு முயற்சி செய்’’ என்று நண்பர்கள் என்னுள் சினிமா ஆசையை விதைத்தார்கள்.

27 வயதில் 70 வயது முதியவராக நடித்தேன்.

கதாநாயகனுக்கு அப்பா, வில்லனுக்கு அப்பா, கதாநாயகிக்கு அப்பா என தொடர்ந்து அப்பா வேடங்களில் நடித்தேன். டைரக்டர் பாரதிராஜா எனக்கு நெப்போலியன் என்ற பெயரை சூட்டினார். அதைக்கேட்டு நண்பர்கள், ‘‘ஏன் மெக்டவல், ராயல் சேலஞ்ச் என்று கூட பெயர் வைத்திருக்கலாமே...’’ என்று கேலி செய்தார்கள்.

அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், முயற்சி செய்து முன்னேறினேன்’’ என்கிறார், நெப்போலியன்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி