உடல் எடையை குறைக்க போறீங்களா? நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான 3 ரூல்ஸ் இதுதான்..

  உடல் எடையை குறைக்க போறீங்களா? நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான 3 ரூல்ஸ் இதுதான்...






கொரோனா தொற்றுநோய் ஆரம்பமான காலம் முதல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வரும் நடைமுறைக்கு பலர் பழகிவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். மேலும் வீட்டிலேயே இருப்பதன் காரணமாக பலரில் மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் பல பிறழ்வுகள் தோன்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. எப்போது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மக்களின் உணவுகள், செயல்பாட்டு நிலைகள், தூக்கப் பழக்கங்கள் மற்றும் தினசரி நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக மாறியதால், பலரின் எடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, தற்போது மக்கள் பலர் டயட் உணவுகளுக்கும், உடற்பயிற்சி வழக்கத்திற்கும் தங்களது வாழக்கை முறையை மாற்றி வருகின்றனர்.


அதிக எடை அல்லது பருமனான உடல் எடையை கொண்டவர்களில் சில சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதாவது பருமனான மக்களில் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பித்தப்பை கற்கள், சுவாச பிரச்சனைகள் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட தீவிர உடல்நல பிரச்சனைகள் உருவாகும் அபாயம் அதிகம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிக உடல் எடை கொண்டவர்களில் கவலை, மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகளும் எளிதில் வரலாம் என்று கூறப்படுகிறது. அதுவே உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நீங்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், வலுவானவர்களாகவும் இருக்க முடியும். அது உங்கள் உடல்நலம் மற்றும் மனஅமைதியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.


பொதுவாக, ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று முறையற்ற உணவு மற்றும் உடல் உழைப்பு இல்லாத உட்கார்ந்த வாழ்க்கை முறையை வழிநடத்துவது ஆகும். கூடுதலாக, தொற்றுநோயின் போது மக்களில் அதிகரித்துள்ள மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்க நடைமுறைகள் உடல் பருமன் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளன. எனவே உடல் எடையை குறைத்து சரியான உடல் வடிவத்தை பெற ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் ஆகிய மூன்று விதிகளையும் ஒருவர் காட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் எதாவது ஒன்றை கடைபிடிக்காவிட்டாலும் எடையை குறைக்கும் முயற்சியில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும்.


உங்கள் உடல் எடையை சரியான பராமரிக்க இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றவும்.


1. ஆரோக்கியமாக சாப்பிடுவது


ஆரோக்கியமான உணவு எடை மேலாண்மைக்கு மிக முக்கியமாகும். பொதுவாக, உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் குறைந்த கலோரி கொண்ட டயட் உணவுகளை சாப்பிடுவதையும் அல்லது ஒருவேளை உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஆனால் அது தவறு. ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டாலே உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை பெற முடியும். மேலும், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளை உங்கள் டயட்டில் சேர்ப்பது அதிகரித்த எடையை கையாள்வதற்கான சிறந்த வழியாகும். இதுதவிர உங்கள் பசியை கட்டுப்படுத்தும் சில உணவுகளையும் தேர்தெடுத்து சாப்பிடலாம். லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில் பாதாம் பருப்பை மதிய உணவாக சாப்பிடும் மக்களில் ஒட்டுமொத்த பசியின்மை விகிதத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாதாம் தவிர, உங்கள் பசியைக் கட்டுப்படுத்த பழங்கள், மோர், எலுமிச்சை கலந்த நீரையும் பருகலாம்.


2. வியர்க்கும் அளவுக்கு உடல் செயல்பாடு தேவை:


தினசரி வியர்க்கும் அளவுக்கு சில உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். இதற்கு ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம், உங்கள் உடல் வியர்ப்பதால் தேவையற்ற நீர் உடலில் இருந்து வெளியேறும். இது காட்டாயம் உங்கள் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். எனவே, தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.


3. நல்ல தூக்கம்:


மேற்கண்ட இரண்டு விதிகளையும் பின்பற்றிவிட்டு, கடைசியில் நல்ல தூக்கத்தை பராமரிக்கவில்லை என்றால் அது எடையை குறைக்கும் முயற்சிக்கு வெற்றியை வழங்காது. சரியான உணவு எடுத்துக்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் எவ்வளவு முக்கியமோ, அதேஅளவுக்கு நல்ல தூக்கமும் அவசியம். தினசரி உழைப்பதால் ஏற்படும் சோர்விலிருந்து உங்கள் உடலை மீட்க போதுமான தூக்கம் அவசியம். தூக்கமின்மை உங்கள் ஓய்வு வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கும். இன்சுலின் எதிர்ப்பையும் ஏற்படுத்தும். மேலும், இது பசியை அதிகரிக்கிறது மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் குறுக்கிடுவதன் மூலம் மனநலத்தை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதில் ஈடுபட வைக்கும் வாய்ப்புகள் அதிகம்.


எனவே, உடலெடையை குறைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த மூன்று முக்கிய விதிகளை மனதில் வைத்து செயல்படுங்கள். இது சரியான எடையுடன் உங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க உதவி புரியும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,