செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம்

 




உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியாது. அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான் மொழிபெயர்ப்பு அவசியம். இதை கவனத்தில் கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளரின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோல் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள பல நாடுகளில் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முக்கியமானதாகக் கருதப் பட்டாலும், படைப்பு இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இல்லை. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பதற்காக பரிசு பெற்ற படைப்பாளிகள் கண்டுகொள்வதே இல்லை என்று குரல் இன்னும் உண்டு. மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்கு பாராட்டும், அங்கீகாரமும் மிகவும் அவசியம்.காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையெனில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 93 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. லெனின் படைப்புகள் 321 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. தமிழகத்தில் படைப்பாளிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தாய் நாவலை யாரும் மறக்கமுடியாது. இவை அனைத்தும் மொழிபெயர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சாத்தியம் ஆயிற்று. ஆகையால் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,