: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்

 

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! 









1974 இல் பிளாக் ஹோல் என்று அழைக்கப்படும் கருந்துளைகள் கதிர்வீச்சை வெளியிடும் என்றும், பிளாக் ஹோல் சில குறிப்பிட்ட நிலையில் அதன் தன்மையை சுருக்கிக்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் கணித்திருந்த கணிப்பு, இப்போது 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், விஞ்ஞானிகள் கருந்துளைகளின் குணாதிசயங்கள் மற்றும் இரகசியங்களை வெளிக்கொணர இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

கடந்த சில நூற்றாண்டில், கருந்துளைகளைப் பற்றிப் புரிந்துகொள்வதில் மனிதர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதே உண்மை. குறிப்பாக இந்த கருந்துளைகள் இருக்கும் இடங்கள் தான் பிரபஞ்சத்தில் அதிக ஈர்ப்பு கொண்ட வலுவான இடமாக இருக்கும் பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், கூடுதல் சுவாரசியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒளி கூட இந்த கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அளவிற்குக் கருந்துளையின் ஈர்ப்பு விசையானது ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் வலிமையானதாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ​​கருந்துளைகள் பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய முந்தைய கோட்பாடு மிகவும் சரியாக ஒத்துப்போகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கருந்துளைகள் அவற்றைச் சுற்றியுள்ள இடத்தில் மற்றும் பொருள்களின் மீது அழுத்தத்தைச் செலுத்துகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் சில மாற்றங்கள் என்ன என்பதும் ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது போல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரபஞ்சத்தின் இரகசியங்களை தன் வசம் மறைந்துள்ள கருந்துளை பற்றி இன்னும் பல உண்மைகளை விஞ்ஞானிகள் கட்டவிழ்க்கத் தயாராகி வருகின்றனர். சமீபத்தில் விஞ்ஞானிகள் புதிய கருந்துளையை பூமிக்கு மிக அருகில் கண்டிப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளைகள் ஒளிந்துள்ளன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிரபஞ்சத்தின் இரகசியங்களை தன் வசம் மறைந்துள்ள கருந்துளை பற்றி இன்னும் பல உண்மைகளை விஞ்ஞானிகள் கட்டவிழ்க்கத் தயாராகி வருகின்றனர். இனி மனிதக்குலம் புரிந்து கொள்ள முடியாத பயமுறுத்தும் அரை கற்பனை அண்டமாகக் கருந்துளை இருக்காது என்று கூறப்படுகிறது. பிளாக் ஹோல்ஸ் அழுத்தம் கொடுக்கிறதா? கருந்துளைகள் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் அழுத்தத்தைச் செலுத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

47 ஆண்டுகளுக்கு முன் ஸ்டீபன் ஹாக்கிங் கணித்த கணிப்பு என்ன தெரியுமா? இதை, 1974 ஆம் ஆண்டில் கருந்துளைகள் கதிர்வீச்சை வெளியிடும் என்று ஹாக்கிங் கணித்திருந்தார், இது கருந்துளையைச் சுற்றியுள்ள பொருள்களுக்கு வெப்பநிலை இருப்பதை உணர்த்துகிறது. கூடுதலாக, காலப்போக்கில் வாயுக்களின் குவிப்பு அல்லது திரட்சி காரணமாக சில எதிர்வினைகள் நடைபெறும் போது கருந்துளைகள் மெதுவாக அதன் தன்மையை இழந்து சுருங்கத் துவங்கிவிடும் என்று ஹாக்கிங் தனது கோட்பாட்டில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருந்துளையின் ஹரிசொன் வட்டத்தை ஆராய்ந்த போது வெளிவந்த திடுக்கிடும் உண்மை சசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் - பேராசிரியர் சேவியர் கால்மெட் மற்றும் ஃபோல்கர்ட் கைப்பர்ஸ் ஆகியோர் தங்கள் கண்டுபிடிப்புகளை பிசிக்கல் ரிவியூவில் வெளியிட்டனர். ஆராய்ச்சியாளர்கள் கருந்துளையின் ஹரிசொன் வட்டத்தை ஆராய்ந்த போது இந்த திடுக்கிடும் கண்டுபிடிப்பைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. கருந்துளையின் ஹரிசொன் எல்லையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், கருந்துளையின் நிகழ்வான அடிவானத்தில் ஒரு என்ட்ரோபியைப் பார்வையிட்டுள்ளனர்.


எதிர்பாராத திடீர் கணக்கீட்டின் கண்டுபிடிப்பு மூலம் விஞ்ஞானிகள் குழப்பமா? இது அடிப்படையில் எந்த இயற்பியல் பொருளாக இருந்தாலும் அவற்றை அழுத்தத்திற்கு உட்படுத்திச் சுற்றியுள்ள இடத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இந்த இடத்தில் கருந்துளையைச் சுற்றி இருந்த இயற்பியல் பொருள்களின் சாந்த நிலையைக் குறைத்து அமைதியிலிருந்து அவற்றை அழுத்தமான முன்னேற்றத்திற்கு நகர்த்திச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் கணக்கீட்டின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


விஞ்ஞானிகளுக்கு உண்மையைக் கண்டுபிடிக்க சில மாதங்கள் ஆனதா? விஞ்ஞானிகள் சேகரித்த கணக்கீடுகளைப் படிக்கும் போது, ​​விஞ்ஞானிகளால் அவர்கள் விளக்க முடியாத ஒரு கூடுதல் உருவத்தில் ஓடிக்கொண்டே இருந்தனர் என்று கூறப்படுகிறது. அது உண்மையில் கருந்துளையைச் சுற்றியுள்ள அழுத்தத்தால் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழுத்தம் மிகச்சிறியதாக இருக்கலாம், ஆனால் ஹாக்கிங் கணித்ததை இது தெளிவாக அறிவுறுத்துகிறது.

கருந்துளைகள் சுருங்கக்கூடும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன கோட்பாடு உண்மை தானா? ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் சொன்னது போல இந்த கோட்பாடு உண்மை என்றால், கருந்துளைகள் சுருங்கக்கூடும் என்று அவர் கூறிய கோட்பாடும் உண்மை தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கண்டுபிடிப்பின் மூலம், விஞ்ஞானிகள் கருந்துளைகளின் சில புதிய குணாதிசயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுவரை ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய பல கோட்பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கருந்துளையைச் சுற்றியுள்ள பொருள்களில் எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பது பற்றிக் கண்டறியவும், கருந்துளை பற்றி இன்னும் கூடுதல் இரகசியங்களை வெளிக்கொணர்வதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்


article courtesy:https://tamil.gizbot.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,