நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்கும் வாட்டர் கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?
நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்கும் வாட்டர் கேன் தண்ணீரைக் குடிக்கலாமா? திறந்து வைத்த நீரைக் குடிக்கலாமா?
சில நேரங்களில் குடிக்கும் தண்ணீரை நம் சௌகரியத்திற்கு ஏற்ப வாட்டர் கேன்களில் அல்லது ஜாரில் ஊற்றி வைப்போம்.
குறிப்பாக படுக்கையறை, சைட் டேபிள் , கார் , வேலை செய்யும் டேபிள் போன்ற இடங்களில் எப்போதும் நாம் தண்ணீரை பிடித்து வைத்திருப்போம். இந்த தண்ணீர் சில நேரங்களில் 2 நாள் அல்லது ஒரு நாள் முழுவதும் அப்படியே சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது எனில் அதைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
சிலர் எதுக்கு பிரச்னை என கீழே ஊற்றிவிட்டு ஃபிரெஷ் தண்ணீரை பிடித்து குடிப்பார்கள். ஆனால் உண்மையில் அது நல்லதா , கெட்டதா என யாரும் ஆராய்வதில்லை. அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.
நீங்கள் ஒருவேளை 2 நாள் கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்த தண்ணீரை குடிக்கிறீர்கள் எனில் அதன் சுவை மாறியிருப்பதை உணர்ந்திருக்கக் கூடும். ஏன் அவ்வாறு நிகழ்கிறது தெரியுமா..?கார்பன் டை ஆக்சைடு காரணமாக அவ்வாறு நிகழ்கிறது.
நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை சுமார் 12 மணி நேரம் மூடி வைக்கும்போது, காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அதனுடன் கலக்கத் தொடங்குகிறது. இது தண்ணீரின் pH அளவைக் குறைத்து, சுவையை மாற்றுகிறது. ஆனால் அப்போதும் கூட இந்த தண்ணீர் குடிக்க பாதுகாப்பானது.
பெரும்பாலான வல்லுநர்கள் குழாய் நீரின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் என்று கூறுகிறார்கள். 6 மாதத்திற்குப் பிறகு, தண்ணீரில் உள்ள குளோரின், பாக்டீரியா மற்றும் ஆல்கா வளர்ச்சியை பெருக்குகிறது. நீங்கள் தண்ணீரை ஒரு சூடான இடத்தில் சேமித்து வைக்கும் போது பாக்டீரியாவின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.
திறந்து வைத்த நீரை குடிக்கலாமா..?
அதேசமயம் நீங்கள் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்த குடிநீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதை ஒரு இரவு திறந்து வைத்திருந்தால் கூட அது குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. அவ்வாறு திறந்து வைத்திருக்கும் தண்ணீரில் காற்றின் மூலம் பல தொற்று, நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் அதில் விழுந்திருக்கும். கண்ணுக்குத்தெரியாத இந்த பாக்ட்டீரியாக்கள் பல பாதிப்புகளை தரக்கூடும்.
வாட்டர் பாட்டிலில் சேமித்த நீர் :
வாட்டர் பாட்டிலில் நீண்ட நேரம் வைத்திருக்கும் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலின் விளிம்பில் நாம் வாயை வைக்கும்போது, இறந்த சருமம், தூசி மற்றும் வியர்வை நம் சருமத்தை மூடி மீதமுள்ள தண்ணீரில் பின்வாங்கிவிடும். நம் உமிழ்நீர் கூட நிறைய பாக்டீரியாக்களைக் கொண்டு செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை அனைத்தும் பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கின்றன. எனவே நாம் அதை அப்படியே வைத்திருப்பது அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்திருக்கும். பின் அதே தண்ணீரை மீண்டும் குடிக்கும்போது, அந்த பாக்டீரியாக்கள் உள்ளே சென்று பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய வாட்டர் கேன் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது இன்னும் மோசமானது.
காரில் சேமித்து வைத்த நீரை குடிக்கலாமா..?
காரில் உள்ள நீர் சூரியக் கதிர்கள் காரணமாக வெப்பமடைகிறது. இது பாக்டீரியாவின் சரியான இனப்பெருக்க தளமாக விளங்குகிறது. BPA அல்லது மற்ற ரசாயனத்தால் செய்யப்பட்ட பாட்டில்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை இரசாயனங்களை தண்ணீரில் கசிந்து அந்த தண்ணீரை குடிக்கும்போது பல வகையான ஆபத்துகளை உண்டாக்கும்.
குறிப்புகள்
பிளாஸ்டிக் அல்லாத பாட்டில் அல்லது ஜாரில் சேமித்த தண்ணீரை சரியாக மூடி போட்டு வைத்தால் அதை குடிப்பதில் எந்த பாதிப்பும் இல்லை.
ஒருபோதும் உங்கள் வாயை வைத்து கேன் தண்ணீரை குடிக்காதீர்கள். தூக்கி குடியுங்கள். அவ்வாறு குடிப்பதுதான் உங்கள் பழக்கம் எனில் மிச்சம் வைக்காமல் முழுவதையும் குடித்துவிடுங்கள்.
உங்கள் காரில் தண்ணீர் பாட்டிலை வைக்காதீர்கள்.
தண்ணீர் குடிக்க கண்ணாடி பாட்டில், ஜார் , கிளாஸ் பயன்படுத்தவும். ஒவ்வொரு நாளும் அதை கழுவவும்.
Comments