உங்கள் இதயம் வலுவாக இருக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

 உங்கள் இதயம் வலுவாக இருக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.









ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப் படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும்.நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும்


அதிலும் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், அது இதய நோயை உண்டாக்கி, நாளடைவில் மரணத்திற்கும் வழிவகுக்கும். ஆகவே உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நிச்சயம் கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.


இப்போது அந்த கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.


1. வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்


இந்த மாதிரியான வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையானது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.


2. ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடவும்


ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.


3. தொடர்ச்சியான பரிசோதனை


உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது பரிசோதித்தால், அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் எதையும் பின்பற்ற முடியும்.


4. எடை குறைவு


கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடையை குறைத்தலும் ஒரு வழி தான். ஆம், பொதுவாக உடல் பருமன் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும்.


5. புகைப்பிடித்தலை தவிர்க்கவும்


உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது புகைப்பிடித்தவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்துவிடும்.


6. தினமும் உடற்பயிற்சி


உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.


7. கலோரி குறைவான உணவுகள்


சில உணவுகள் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், ஆப்பிள், பிஸ்தா போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.


8. க்ரீன் டீ


அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு ஒரு எளிய வழியென்றால், அது க்ரீன் டீ குடிப்பது தான். ஏனெனில் க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.


9. சோயா


சோயா உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்து வந்தாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைந்து, உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.


.


10. இரத்த சர்க்கரை அளவு கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க வேண்டுமெனில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான இரத்த சர்க்கரையின் அளவானது, இதய நோய்க்கு வழிவகுக்கும்.


உங்கள் இதயம் அதன் பணியை திறமையாகச் செய்யும்போது, உங்கள் உடல் இரத்தத்தில் பரவும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது, இது உங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்க போதுமான ஆற்றலைத் தருகிறது. நாள்பட்ட சோர்வு இதய பிரச்சினைகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி