பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கவுல்

 பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கவுல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93-வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார்.





பெஷாவரில் பிறந்த ரஜினி கவுல் தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும் பின் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' செய்தி நிறுவனத்திலும் பணியாற்றிய பின் லண்டனில் உள்ள பிபிசி செய்தியின் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
அதற்கடுத்து 1961 ஆம் ஆண்டு முதல் பிபிசியில் ஹிந்தி மொழி செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவரே பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ஆவார்.
பின் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த மஹிந்த்ரா கவுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தவர் தற்போது பாகிஸ்தானில் 93 வயதில் காலமாகியிருக்கிறார்.
ரஜினி கவுல் 60 ஆண்டுகாலம் பிபிசியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்