கவிதைகள் பக்கம் ./உமாசங்கர் அவர்களின் கவிதைகள்


                                       கவிதைகள்


வண்ணத்துப்பூச்சி!

--------------------------------




 இருள் உடையும் 

புலர் காலைப்பொழுதின்

புத்தம் புதிய நிறங்கள் அனைத்தையும்

தன்னுடலில் தாங்கி, 

சின்னஞ்சிறு பிரபஞ்சமென, 

தன் பட்டுத் துகிலையொத்த 

சிறகசைத்து

, வான்வெளியில் 

சிற்றுலா செல்கிறது

 இந்த வண்ணத்துப்பூச்சி!


2 .சேவல்!









பகலெல்லாம் பார்சுற்றி

களைப்படைந்த கதிரவன்

 தன் கதிர் சுருக்கி, 

வெண்மேகத் தொட்டில் கட்டி

, தென்றலின் தாலாட்டில் துயின்றுவிட, 

பகலவனா, பால்மதியா

 என மயங்கி

, தன் வாங்கருவாள் வாலுயர்த்தி

, பிடரிமயிர் சிலிர்த்த படி 

வான்நோக்கி, 

காலமயக்கம் தோற்றுவித்து

 கண்ணயர்ந்த கதிரவனுக்கு,

 கண்டனக்குரல் எழுப்புகிறது

 இந்த சேவல்!


--உமாசங்கர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,