திருப்பதி தரிசனம்: புதிய விதிமுறைகள்!

 திருப்பதி தரிசனம்: புதிய விதிமுறைகள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இனி தடுப்பூசியின் இரண்டு டோஸை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


முன்னதாக, ஆன்லைனில் வெளியிடப்படும் ரூ.300 தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசன டோக்கன்களை சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2,000 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மற்ற மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த கோரிக்கையை ஏற்ற கோயில் நிர்வாகம், இலவச தரிசனத்தில் அனைத்து மாநில பக்தர்கள், வெளிநாட்டுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்தது. அதற்காக, தினமும் 8,000 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது,


அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தியதற்கான சான்று அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசனத்துக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்