உலகஓசோன்தினம்/வேர்த்திரள் /* பிருந்தா சாரதி *

 உலகஓசோன்தினம்

*

வேர்த்திரள்

*



*

காடுகளின் ஊடே சாலையொன்று அமைக்கப்பட்டபோது யாரும் எதிர்க்கவில்லை.


மாறாக மகிழ்தனர்

அதன் பின் மரங்களைக் காணவில்லை .


வெட்டப்பட்ட அடிமரங்கள் கசாப்புக் கடைப் பலகையாகச்

சாட்சி சொல்லும் நெடுஞ்சாலைகள் 

விரைவு வழியாய்  இப்போது.


உறங்கிக்கொண்டே

பயணம் செல்லும் 

சொகுசுப் பேருந்துகளில் 

நெகிழித் தண்ணீர்ப் புட்டிகளையும்

நிறுத்திவிட்டார்கள்.


வந்தடையும் பெருநகரின் பெயரில்

பசுமைக் குறியிட்டிருக்கிறார்கள்

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் பகுதியென. 


எங்கும் தூய்மை  

எதிலும் தூய்மை

மருந்துக்குமில்லை

தூசி புழுதி .


அதன் மண்ணுக்குள் பெருமூச்சு விடும்

வேர்த்திரள்கள் மீது

வானுயர் கோபுரமாய் வளர்ந்த

அடுக்குமாடிக் கட்டடங்களின்

மொட்டை மாடிகளில் 

தொட்டிச் செடிகள்

வளர்க்கிறார்கள்

காடுகளைப் பார்த்தறியாத மழலையர்.


அவர்கள் பயிலும் நர்சரிகளில் ஒலிக்கிறது

ரெயின் ரெயின் கோ அவே

ரைம்.


வனமழித்த தலைமுறையின்

வரலாறு

ஓசோன் துளைகளின் ஊடே

தீப்பிடித்துக் கருகும் நெடியை

உணரும் புலன்கள் 

அங்கு யாருக்குமில்லை


-பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி