முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி

 முரசொலி 7.7.09 அன்று வந்த செய்தி...

தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் வைத்தியநாதன், `கலாரசிகன்’ என்ற புனை பெயரில் வாரந்தோறும் ஞாயிறு அன்று தமிழ்மணி என்ற பகுதியில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார். நேற்றைய (19.7.2009) இதழில் தமிழ்மணி `இந்த வாரம்’ பகுதியில் இலக்கிய விமர்சனக் கட்டுரையில் முதல்வர் கலைஞர் அவர்களைப் பற்றி , பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில் முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய வாதி என்றும், தமிழ்மீது கொண்ட காதலால்தான் கலைஞர் எப்போதும் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் தன்னை வைத்துக்கொண்டிருக்க முடிகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் கலாரசிகன்!
இதுகுறித்து தினமணி - தமிழ்மணி `இந்த வாரம்’ பகுதியில் கலாரசிகன் எழுதியுள்ளது வருமாறு :-
``திங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி. கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்ன போது, என்னை நானே கிள்ளி விட்டுக் கொண்டேன். முதல்வர் அலுவலகத்தி லிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன்?
அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிர மணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் ‘தமிழ்மணி’ பகுதியில் வந்த, ‘இந்த வாரம்’ எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்து கொண்டபின், அவர் விடுத்த
வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.
"கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டி ரேகஸ் கவிதைகளை மொழி பெயர்த்துப் போட்டிருந்தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழி பெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லை யென்றால், ஆங்கில மொழி பெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்!" என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்துவிட்டது.
இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரோ பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால் அது எப்படி முடிகிறது?
கிரேக்க கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்த ராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறது? பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால்? தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும்!
அந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லை!’’
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,