கன்ஃபூசியஸ் பிறந்த நாள்

 கன்ஃபூசியஸ் ( தெளிவுப்படுத்தியவ்ர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28


பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது….
பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ்.
‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள, அரசன் அதிர்ந்து போனான்.
கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான். வேலைக்கு ஆட்கள், பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுக்கப்பட்டது.
மக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம் ஒப்பைடத்தார் கன்ஃபூசியஸ். ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
சில வருடங்களிலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மன்னரிடம் சொன்னார்.‘‘சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள்’’ எனக் கோபத்துடன் கேட்டார் மன்னர்.
‘‘எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்
கன்ஃபூசியஸ்.
அப்பேர்ப் பட்ட கன்ஃபூசியஸ் கிறிஸ்துவுக்கு முன், 551-ம் வருடம் செப்டம்பர் 28ம் தேதி பிறந்தபோது, அவரது தந்தையின் வயது 70. தாய்க்கு வயது 15. இவர் பிறந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தார்.
பழைய இலக்கியங்கள், அரசியல்,சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது. இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார்.
மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்ல்லவில்லை என்பதால்,
அவற்ரை புறக்கணித்தார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார்.
பல நாடுகளின் அரசுகள் அவரைத் தங்கள் எல்லைக்கோட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டி அடித்தன.
‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு எனும் ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்’ என மனிதர்களின்
துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார் கன்ஃபூசியஸ்.
அதேபோல, வெற்றிபெற்ற மனிதனாக மாறுவதற்கும் அவர் வழி சொன்னார். ‘மனிதர்கள் இயல்பாகவே எளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல. வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றார்.
அவர் வாழ்வினை மாற்றியதே இந்த மந்திரச் சொல்தான், சீனா முழுவதும் மதம்,சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உண்டாக்கவும் காரணமாக இருந்தது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி