ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (6)

 ஜெய் அனுமான்    /  ஆஞ்சநேயர் வரலாறு/    கவிதைத் தொடர் (6)





 இராவணனின் சபையிலே அனுமனின் வரவு

 

 இலங்கை வேந்தனின் செயலோ  தலைக்குனிவு

 

 தூதுவனாய் வந்தேன் தீவினை களைவாய்

 

 தூய அன்னையினை விட்டுவிடு கொடியவனே விரைவாய்

 

 பத்துத்தலை இராவணனுனக்கு பண்பென்பதே இல்லை

 

 பாசத் தம்பி விபிடனின் உரைக்கும் பயனில்லை

 

 செய்த தீவினைக்கு கேடொன்றே விளையும்

 

 செருக்கைவிடு அண்ணா மாற்றுக உன் நிலையும்

 

 அடங்க மறுப்பதிலே ஆணவமே முன்னிற்க

 

 அனுமனின் வாலில் தீயிட்டு மகிழ்ந்திருக்க

 

 பற்றியதீ வாலினால் பற்றியது இலங்கையே

 

 பரிதவிக்க இராவணனால் சேர்ந்தது துயரங்கே

 

 ராவணனே பேரழிவு நோக்கியே செல்வாய்

 

 ஸ்ரீ ராமபிரானை போர்புரிந்து நீயெங்கு வெல்வாய்

 

 அசோகவனத்தில் இந்நிலவரம் சீதைக்கும் தெரிந்ததே

 

 அனுமனுக்கும் நம் நிலையில் அக்கறையும் சேர்ந்ததே

 

 தென்திசையிருந்து வடக்கே அனுமனின் பயணம்

 

 தெய்வத்தைக் கண்டதால் மகிழ்ந்த தருணம்

 

 பிறதிசையிலிருந்து வந்தனர் பயனில்லாது கலங்கி

 

 பெருந்துயரோடு சீதையை கண்டிலரெனர் தயங்கி

 

 அனைவரும் எதிர்பார்த்தனர் தென்திசை நோக்கியே

 

அனுமன் கொண்டுவரும் நல்லதொரு செய்தியே

 

 கண்டேன் சீதையை அனுமனின் சொல்லொன்றே

 

 காத்திருந்த யாவர்க்கும் புத்துயிர் தந்ததன்றே

 

 அனுமனின் செயலினை ஸ்ரீராமனும் மெச்சிட

 

 ஆரத்தழுவி இராமன் அன்புதனை பகிர்ந்திட

 

 அசோகவனத்தில் மாசில்லா அன்னை படும்பாடு

 

 அனுமன் உரைத்த நிலையோ கண்ணீரோடு

 

 இராவணனின் தந்திரச் செயலின் சூழ்ச்சியது

 

 இனிநம் அன்னையே மீட்பதொன்றே பெரியது

 

 எப்போது சீதையை காண்பதென இராமனின்  சிந்தனை

 

 எவ்வகையில் போரில் வெல்வது இராவணனை

 

 வானரக் கூட்டங்கள் உதவிடும் தருணம்

 

 வலுவாய்  கடல் நடுவே பாலமமைக்க கவனம்

 

 அணில்களும் உதவியது சிறு சிறு கல்லெடுத்து

 

 அசைந்திடும் கடலலை நடுவே பாதையமைத்து


தொடரும்)




கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை


 

 இராமன் லட்சுமணன் நடந்தே முன்னாடி செல்ல

 

 எளிதாய் வெல்லலாமென வானரர்களும் சொல்ல

 

 இலங்கையில் ராவணனும் இச்செய்தியினை அறிய

 

 இப்போதாவது விடுவாயென விபிடணும் மொழிய

 

 எதற்கும் ராவணன் அஞ்சாத  நிலையே

 

 எதிர்க்க வரும் ராமனின் பலம்தனை அறியலையே

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி