கழுத்தில் இருக்கும் கருமையை போக்க

 கழுத்தில் இருக்கும் கருமையை போக்க கழுத்தை சுற்றிலும் கருமையாக இருந்தாலே சற்று சங்கடமாக இருக்கும். இது சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.


கற்றாழை : கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய சரியாகும்.


ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.


பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.


தயிர் : தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.


உருளைக்கிழங்கு : கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்