பார்பரா மெக்லின்டாக்,

 பார்பரா மெக்லின்டாக்,
1983ஆம் ஆண்டில், மருத்துவத்திற்கான நோபல் விருது பெற்ற அமெரிக்க அறிவியலாளர். இதில் சிறப்பு என்னவென்றால், மருத்துவத் துறையில் தனியாக நோபல் பரிசு வென்ற முதல் பெண் இவர்தான்.
மரபணு மாற்றம் (Genetic transposition), அதாவது க்ரோமசோம்களில் மரபணுக்கள் எப்போதெல்லாம் இடம் மாற்றம் அடைகிறது என்பதைக் குறித்து இவர் ஆய்வு செய்தார். இந்தக் கருத்தைக் கொண்டுதான், ஏன் குறிப்பிட்ட பண்புகள் குறிப்பிட்ட நபர்களில் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றன என்று கண்டுபிடிக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரே சோளத்தில், வெவ்வேறு சோளமுத்துக்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கலாம்.
1921ஆம் ஆண்டில், கார்னெல் பல்கலைக்கழகத்தில், தாவரவியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார் பார்பரா. இவர் அப்பல்கலைக்கழகத்தில் மரணுவியல் (genetics) படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார், ஆனால் அக்காலத்தில் அப்பல்கலைக்கழகத்தில் பெண்கள் மரபணுவியலில் பட்டம் பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே பார்பரா தாவரவியலில் பட்டம் பெற்று, maize cytogeneticsஇல் தனது ஆய்வை நடத்தினார். Cytogenetics என்றால், செல்களின் அமைப்பு மற்றும் வேலையை ஆய்வு செய்யும் மரபணுவியலின் ஒரு பகுதி.
அந்தத் துறையில் பல மதிப்புமிக்க பட்டங்களையும், விருதுகளையும் பெற்றதோடு, 1944ஆம் ஆண்டில், தேசிய அறிவியல் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோளத்தில் மரபணுக்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் செல்களைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார் பார்பரா. இவரும், ஹாரியட் க்ரெய்டன் எனப்படும் அறிவியலாளரும் இணைந்து, க்ரோமசோம் எனப்படும் சின்ன பாகங்கள் இணைந்துதான் DNA என்ற பொருளை உருவாக்குகின்றன என்று கண்டுபிடித்தனர். ஆனால், அப்போது DNA பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. DNA என்ற பெயர்கூட உருவாகியிருக்கவில்லை.
பார்பரா தன்னுடைய ஆய்வை, தான் படித்த கார்னெல் பல்கலைக்கழகத்தில் தொடர வேண்டும் என்று விருப்பபட்டார். ஆனால், அங்கு பெண் பேராசிரியர்களை நியமிக்க அவர்கள் விரும்பாததால், மிசௌரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார். பிறகு நியூ யார்க்கிற்கு வந்து சோளத்தில் தன்னுடைய ஆய்வைத் தொடர்ந்த அவர், சில நேரங்களில் மரபணுக்கள் மாற்றம் அடைகின்றன என்றும், அதுவும் வெளிப்புறக் காரணங்களால் மாற்றம் ஏற்படலாம் என்றும் கண்டுபிடித்தார். இதை, சோளத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளை வைத்துக் கண்டுபிடித்தார்.
மரபணுக்களில் பார்பரா நடத்திய ஆய்வு, மிகவும் நவீனமானதாக இருந்தது. இதனாலேயே அவரின் ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், பெண் என்ற காரணத்தினால் ஒடுக்குமுறையைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, அம்மாதிரியான சூழலில் வேலை பார்க்க முடியாமல், தன்னுடைய வேலைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார்.
1970களில், அவர் ஆய்வு செய்த பொருளின் பெயர் DNA என்று கனுட்கொண்டதும், அவர் ஆய்வுகளை ஆராய்ந்து, அனைத்துமே உண்மை என்று ஒப்புக்கொண்டனர். இறுதியில், அனைவருக்கும் முன்பே அதைக் கண்டுபிடித்ததற்காக, அவருக்குப் பல விருதுகளும் பரிசுகளும் கொடுக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில், அவருடைய 81வது வயதில், உயரிய விருதான நோபல் விருதைப் பெற்றார்.
இன்று (செப்டம்பர் 03) பார்பரா மெக்லின்டாக் காலமான நாள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,