கொய்யாப் பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லதாம்.

 கொய்யாப் பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லதாம்.







.


ஆரஞ்சு, ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது. குறிப்பாக, இதில் இருக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் அளவுகளை அதிகரிப்பதால், குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுவதில் கொய்யா முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உதவியுடன் , ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டசத்து நிறுவனம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கொய்யாவின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டது. 8 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குழந்தைகளின் உடம்பில் ஹீமோகுளோபின், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் அளவுகளை அதிகரித்ததை கண்டுபிடித்தனர். மேலும், அந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளனர். அத்துடன் கடுமையான சுவாச தொற்றைக் கூட குறைக்கும் சக்தி கொய்யாவுக்கு இருப்பதையும் அறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கொய்யாவின் நன்மைகள் :


இந்தியாவில் குழந்தைகளிடையே இரும்புச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. தேசிய சுகாதார கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 59 விழுக்காட்டினர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. கிராமபுற குழந்தைகள் மட்டும் 3 விழுக்காட்டினர் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகையால் பாதிக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது.


இதனைக் கட்டுபடுத்துவது குறித்தும், கொய்யாவை உணவில் சேர்த்தால் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராயப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மலிவு விலையில் கொய்யா கிடைப்பதாலும், வைட்டமின் சி நிறைந்திருப்பதாலும், ஆண்டு முழுவதும் கிடைப்பதாலும் இந்த பழத்தை ஆய்வாளர்கள் தேர்தெடுத்தனர். ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடும்போது 4 மடங்கு வைட்டமின் சி கொய்யாவில் உள்ளது.


இரும்புச்சத்தை கொடுக்கும் கொய்யா:


இதுகுறித்து பேசிய ஆய்வாளர் டாக்டர் கே.மாதவன் நாயர், "வைட்டமின் சி பொருட்களில் இருக்கும் நொன்ஹீம், உடலில் இரும்புசத்து உரிஞ்சுதலை அதிகரிக்கிறது. மற்ற உணவுகளில் கிடைக்கும் இரும்புச்சத்தில் 5 - 10 விழுக்காடு மட்டுமே உடம்பு உறிஞ்சுக்கொள்ளும் நிலையில், வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடும்போது அது இரட்டிப்பாகிறது என தெரிவித்துள்ளார். பருப்பு உணவுப்பொருட்களில் இருக்கும் பைட்டேட் மற்றும் பாலிபினால்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும் நிலையில், அதனை வைட்டமின் சி பழங்கள் சரிசெய்கிறது.


கொய்யாவை எப்போது சாப்பிட வேண்டும்?


கொய்யா பழங்களை சாப்பிடுவது மட்டும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்தை கொடுக்காது. அதனை சரியான டையட் முறையை பின்பற்றி உணவுகளுடன் சேர்த்து கொடுத்தால் மட்டுமே அவர்களின் உடம்புக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். கொய்யா பழம் சாப்பிடுவதற்கு முன்பு இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கும் ஆய்வாளர்கள், பின்னர் கொய்யாவை சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் கொடுக்கப்படும் உணவுகளில் 15 விழுக்காடு மட்டுமே இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், வீட்டில் கொடுக்கப்படும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிறைந்த உணவை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். உணவுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை கொடுக்கும்போது கூடுதல் ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி