விழித்தெழட்டும் என் தேசம் /மகாகவி இரவீந்திரநாத் தாகூர் / மொழிபெயர்ப்பு: பிருந்தா சாரதி *

 விழித்தெழட்டும்

என் தேசம் 

*

உலக மொழிபெயர்ப்பு நாள்


















எங்கே இதயம் 

அச்சமின்றி இருக்கிறதோ


எங்கே தலை 

நிமிர்ந்து நிற்கிறதோ


எங்கே அறிவு தளையேதுமின்றி சிறகடிக்கிறதோ


எங்கே உலகம் குறுகிய எண்ணங்களால் 

துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படாமல் இருக்கிறதோ


எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து 

சொற்கள் வெளிப்படுகிறதோ


எங்கே முயற்சிகள்  தளர்ச்சி இன்றி 

முழுமை நோக்கித்

தன் கரங்களை விரிக்கிறதோ


எங்கே

வழக்கொழிந்த பழக்கவழக்கங்கள் எனும் பாலைவனத்தால்  தெளிவான இலட்சிய நதி

வழிமறிக்கப்படவில்லையோ


எங்கே 

என்றும் நிலைத்திருக்கும் எண்ணங்களும் செயல்களும் 

இதயத்தை வழிநடத்துகிறதோ


அந்த விடுதலையின் விண்ணகத்தில்

என் தந்தையே  

விழித்தெழட்டும்

என் தேசம் .


காகவி இரவீந்திரநாத் தாகூர் / 

மொழிபெயர்ப்பு: பிருந்தா சாரதி  *


 - 

உலக மொழிபெயர்ப்பு நாள்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்