திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..

 திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் நீரிழிவு நோய் உண்டாகும் என்பது பலருக்கும் தெரிந்ததே. இருப்பினும் திடீரென சில நேரங்களில் சர்க்கரை அளவு வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரிக்கும் பிரச்னைகளும் அவ்வபோது நிகழும். எனவே அதற்கெல்லாமும் நீரிழிவு நோயாளிகள் தயாராக இருக்க வேண்டும்.


அப்படி அதிகரித்தால் சில நேரங்களில் கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்கச் செய்யலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம். எனவேதான் மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சர்க்கரை அளவை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் எடுத்து குறித்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி அளவு சற்று கூடுதலாக இருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.


உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இரத்ததில் இன்சுலின் அளவு குறைந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். சர்க்கரை அளவு ஒரு டெசிலிட்டருக்கு 140 மில்லிகிராம் குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை 140 மில்லிகிராமிற்கு சற்று அதிகமா இருந்தால் உணவு உண்டபின் மீண்டும் 2 மணி நேரம் கழித்து எடுக்க 180 மில்லிகிராமைக் கடந்து சென்றால் அது வரம்பை மீறி சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.


அப்படி இருக்கும்போது உங்களுக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். பார்வை மங்களாக தெரியும். தலைவலி, உடல் சோர்வு, அதிக பசி போன்ற அறிகுறிகள் இருக்கும்.


குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை கண்டதும் உடனே அதைக் குறைப்பதற்கான வழிகளை தேட வேண்டும். அதற்கு முதலில் உங்கள் மருத்துவரை அணுகி உரிய மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.


இதற்கு முன் இன்சுலின் மருந்து எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் அடுத்த முறை நீங்களாகவே எடுக்கக் கூடாது. அப்போதும் மருத்துவரிடம் குளுக்கோஸ் அளவை கூறிய பின் அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். இன்சுலின் எடுத்தபின் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் குளுகோஸ் அளவை சோதனை செய்து பாருங்கள்.


உடற்பயிற்சியும் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். எனவே நடைபயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவை மேர்கொள்ளலாம். அதுவும் பயிற்சியாளர் பரிந்துரை, மருத்துவரின் ஆலோசனைகளை பெற்ற பின் செய்ய வேண்டும்.


தண்ணீர் நிறைய குடிக்கலாம். அதிக தண்ணீர் குடிக்கும்போது உடல் சிறுநீர் வழியாக கூடுதலான சர்க்கரையை வெளியேற்றிவிடும். இதற்கு ஆய்வுகள் பல வந்திருந்தாலும் தெளிவான விளக்கம் கிடைக்காததால் இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.


நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவு இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரித்தால், நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உடனே அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். அவ்வாறு இருக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, குமட்ட, வாய் வறண்டு போதல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் இறப்பும் நிகழும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்