நடிகர் பொன்வண்ணனை போனில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

 நடிகர் பொன்வண்ணனை போனில் அழைத்து பாராட்டிய முதல்வர்!



நடிகர் பொன்வண்ணனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. கடந்த 34 வருடங்களில் இல்லாத அளவுக்கு கண்ணியத்தோடும், ஆக்கப்பூர்வமான முறையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. கடந்த பத்து வருடங்களில் முதல்வராக இருந்தவர்கள் தங்கள் துறைசார்ந்த கேள்விகளுக்கு சட்டசபையில் பதிலளித்ததில்லை. ஆனால், இந்தமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் 39 நிமிடங்கள் பதிலளித்தார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடந்த அனைத்து தினங்களிலும் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இப்படியொரு அரசியலை இதுவரை நான் பார்த்ததில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்த நிலையில், நடிகர் பொன்வண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வரைந்து, "ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பு... விவாதங்கள்... மக்கள் நல அறிவிப்புகள்... என நம்பிக்கையுடன் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு
வாழ்த்துகள்
..." என தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் தொலைபேசியில் நடிகர் பொன்வண்ணனை அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியிருக்கும் பொன்வண்ணன், "முதல்வர் இல்லத்திலிருந்து எனக்கு அழைப்பு... தொடர்பில் வந்த முதல்வர் எனது ஓவியத்தை பாராட்டியதோடு, நம்பிக்கைக் கொண்ட வரிகளுக்கு நன்றியும் தெரிவித்தது மகிழ்வின் உச்சம்" என குறிப்பிட்டு, முதல்வரின் உழைப்பிற்கும், அன்பிற்கும் தனது அன்பை தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி