பளபள கூந்தலுக்கு....

பளபள கூந்தலுக்கு....எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:


ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.


வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.


ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.


இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.


முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.


கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும். 


இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நீங்களும் கூந்தல் அழகி தான்!


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,