ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (8)
ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (8)
அன்னையை
பார்த்த லட்சுமணனுக்கு ஆனந்தமே
அடுத்தடுத்த நிகழ்வுகளும் தந்தது பேரானந்தமே
ஆண்டுகள் பதினான்கு முடிவுற்ற காலமே
அயோத்தி நோக்கியே ராம லட்சுமணன் வருகை
அண்ணன்களை பார்க்க பரதனுக்கும் உவகை
ராம லட்சுமணன் சீதையுடன் வந்த திருக்காட்சி
எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் பெருமகிழ்ச்சி
யாவரும் எதிர்கொள்ள ஸ்ரீராமனின் முக மலர்ந்ததே
தாய் மூவரை கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்ததே
சான்றோர்கள் முன்னிலையில் ராமனுக்குப் பட்டாபிஷேகம்
சமுத்திரம் தாண்டிய அனுமனுக்கு தனி சுகம்
ராம் ராம் ஜெய ராம் எனும் மந்திரமே
அனுமானின் சொல்லில் வந்திடும் இனிய கீதமே
சொல்லின் செல்வன் அனுமனின் பாத்திரமே
எல்லையில்லா இதிகாச ராமாயணத்தைப் போற்றுவதாகுமே
அனுமனின் நெஞ்சிலே ராம
லட்சுமணனுடன் சீதையன்னை
அடைக்கலம் அவர்களிடமே ஸ்ரீ ராம் ராம் எனும் போதனை
ஜெய ஜெய அனுமான் ஜெய ஜெய அனுமான்
ஜெய ஜெய அனுமான் ஜெய ஜெய அனுமான்.
(முற்றும்)
கவிஞர் .முருக. சண்முகம்
சென்னை
Comments