மாவு இல்லாமல் பூரி சுடலாம்..

 

மாவு இல்லாமல் பூரி சுடலாம்..பூரி செய்து சாப்பிட வேண்டும் என ஆசை இருக்கு, ஆனால் உங்கள் வீட்டில் கோதுமை மாவு இல்லையா? கவலையை விடுங்கள், இனி கோதுமை மாவு அல்லது மைதா இல்லாமல் பூரி செய்யலாம். இதற்கு உங்களிடம் ரவை மட்டும் இருந்தால் போதும், அருமையான பூரி ரெடி.
முதலில் ரவையை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும். பூரி செய்யும் பதத்திற்கு மாவை பிசைய வேண்டும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைவது நல்லது. மாவை நன்றாக பிசைந்த உடன் சிறிது நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூரிக்கு மாவை தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பூரியாக எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அருமையான ரவா பூரி ரெடி...

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம்

நீலமணி கவிதைகள்