குடும்பம்_ஒரு_கதம்பம்/ செல்வி சங்கர்

 #குடும்பம்_ஒரு_கதம்பம்

செல்வி சங்கர்  அவர்களின் இந்த  பதிவை படியுங்க,இயல்பான நகைச்சுவை. கடைசி வரை அந்த காசு எங்கே போனது தெரியல,


                                      ----செல்வி சங்கர்
செல்வி, உன் கிட்ட ஒரு ஐந்நூறு ரூபா இருக்குமா? காலைல இவர் கேட்டார்.
என்கிட்ட ஏது காசு?
ஹேண்ட் பேக்ல வச்சிருப்பியே?
ஒரு 200,300 வச்சிருந்தேன். அதுல தான் அப்பப்ப வாசல்ல வர காய்கறி, கடலைக்காய், பொரி- கடலை இதெல்லாம் வாங்கினேன், மிச்சம் நூறு ரூபா வேணா இருக்கும், பார்க்கிறேன்.
இல்லியே..2500/- ரூபா இருந்துச்சே?
என்னது??
2500/- ரூபாய் இருந்துச்சே உன் ஹேண்ட் பேக்ல. நேத்து நான் பார்த்தேனே!!
என் ஹேண்ட் பேக் எதுக்கு எடுத்தீங்க?
நேத்து 100ரூபாய்க்கு சில்லறை வேணும்னு பார்த்தேன். அப்ப அஞ்சு ஐநூறு ரூபா இருந்துச்சி. 2 அம்பது மட்டும் எடுத்துகிட்டு வேணும்கறப்ப வாங்கிக்கலாம்னு வச்சுட்டேன்.
நீங்க ஏன் என் ஹேண்ட் பேகை எடுத்தீங்க?
எங்க அந்த காசைப்பார்த்தீங்க., எடுத்துக்காட்டுங்க? இல்ல வேணாம் நானே பார்த்துச் சொல்றேன் எனச் சொல்லி ஹேண்ட் பேக்ல தேடிப்பார்த்து பணம் இல்லியேனு சொன்னேன்.
இல்ல செல்வி, கன்ஃபர்மா நேத்து நான் பார்த்தேன், உன் ஹேண்ட் பேக் சுத்தம் செஞ்சி பார்க்கலாம், நிச்சயம் பணம் அதுல தான் இருக்கும்
இதுக்கும் மேல வேற வழியில்லாமல் ஒரு பேப்பரை தரையில் விரித்து ஹேண்ட்
பேகின் இரண்டு அறைகளையும் திறந்து கவிழ்த்தேன். கடகடன்னு பேப்பரில் கொட்டிய வஸ்துகளைப் பார்த்து வாயடைச்சுப் போனார்.
என்னதிது?
எது?
பேப்பர்ல கொட்டியிருக்கே அதெல்லாம்.
எல்லாம் தேவையானது தான்.
இரு, நான் ஒவ்வொண்ணா எடுத்து வைக்கிறேன்.
விக்ஸ், அமிர்தாஞ்சன், இதென்ன?
அது கால்வலிக்கு தடவிக்கிற தைலம். வேணும்.
சரி, உபயோகிக்காத மாஸ்க் 4, சானிடைஸர் பாட்டில், இதெல்லாம் ஓக்கே..
அப்பறம் நாலு பர்ஸ்!! நாலு பர்ஸ் எதுக்கு செல்வி?
ஒண்ணுல என் டெபிட் கார்ட், ஆதார் கார்ட் , கிரெடிட் கார்ட் வச்சிருக்கேன். இன்னொரு பர்ஸ்ல ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்ஸ், ஹேர்பின்ஸ் இருக்கும், இன்னொணனுல சில்லறைக்காசுகள் வச்சிருக்கேன், நாலாவது பர்ஸ்ல முக்கியமான சர்வீஸ்க்கான விசிட்டிங் கார்ட்ஸ் வச்சிருக்கேன்.
என்னது சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் கார்டு, கரட்டாம்பட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கார்டு இதெல்லாம் முக்கியமான சர்வீஸா?
ஆமா எனக்கு அது முக்கியம் தான்.
செரி இருக்கட்டும், இன்னும் என்ன இருக்குனு பார்க்கலாம். ஹேர் பேண்ட் 4, ரெண்டு சீப்பு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, டூத்பிரஷ், குட்டி குட்டியா பிளாஸ்டிக் டப்பா ரெண்டு, ஒரு கல்கண்டு பாக்கெட், தீப்பெட்டி, காட்டன் துணி, இதெல்லாம் எதுக்கு செல்வி?
ரெண்டு சீப்புல ஒண்ணு சிக்கெடுக்க,
ஒண்ணு தலை சீவ. கல்கண்டு பாக்கெட் எதாச்சும் கோவிலுக்குப் போனால்
கொடுக்க, குட்டி குட்டி டப்பா கோவில்ல குடுக்கற விபூதி, குங்குமம்லாம் தனித்தனியா போட்டு வச்சுக்க, தீப்பெட்டி,
கோவில்ல விளக்கேத்த, காட்டன் துணி
கையத் துடைச்சுக்க.
இதெல்லாம் கூட சரி. இந்த சணல்.கயிறு எதுக்கு செல்வி?
எதுக்கும் தேவைப்படும்ங்க. வச்சிருங்க ப்ளீஸ்.
ஷ்ஷபபா. இந்த லக்கேஜ்லாம் வச்சுக்கறதுக்குப் பேர் ஹேண்ட்பேக் இல்ல செல்வி, #கண்டெய்னர்.
நீங்க என்ன வேணா சொல்லிக்கங்க, ஆமா அந்த 2500/- இருந்துச்சின்னீங்களே அது எங்க?
அதானே செல்வி காணோம்.?
நான் நல்லா பார்த்தேனே..
சரி விடுங்க, அது இங்க தான் எங்கேயாச்சும் இருக்கும், ஆனா அந்தக் காசை நீங்க கணக்குல வச்சுக்கக்கூடாது.
கணக்குல வச்சுக்கக்கூடாதா? அப்டின்னா?
அது எதாச்சும் அவசர செலவுக்குனு வச்சிருக்கேன்.
அந்த அவசர செலவுக்கு தானே கேக்கறேன் ஒரு ஐநூறு ரூபா அதுல இருந்து குடு.
அதான் காணாமப் போச்சேங்க!!

( தொடரும்)

----செல்வி சங்கர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,