ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (7)

 ஜெய் அனுமான்    /  ஆஞ்சநேயர் வரலாறு/    கவிதைத் தொடர் (7)






 





நியாயம் உரைத்த விபீடணன் மாறிய இடம்

 

 நிலைகுலைந்த அவனோ சென்றது ஸ்ரீராமனிடம்

 

  இராவணன் போக்கில் அதர்மமே சூழ்ந்திட

 

 ராமனும் துணிந்தான் போர் தனை புரிந்திட

 

 இருபக்கமும் தயாரானது சண்டையிட அந்நாளில்

 

 இந்திரஜித்தை அனுப்பினான் போரில் முதல் நாளில்

 

 தந்தையின் கட்டளையை அடிபணிந்த மகனே

 

 தாமதிக்காமல் களத்தில் நிற்பதுமொரு கடனே

 

 கற்ற வித்தையினால் இந்திரஜித்தும் அம்பெய்த

 

 கணப்பொழுதில் லட்சுமணன் மூர்ச்சையாகி சாய்ந்ததே

 

 பரிதவித்து போனதங்கே ராமனது  நெஞ்சே

 

 பயன்தர தேவையிங்கே சஞ்சீவியெனும் மருந்தே

 

 அனுமனின் ஆற்றலொன்றே ஆறுதலாய் மாறியே

 

 அதிவேகமுடன் பெயர்த்து கொணர்ந்த சஞ்சீவி மலையே

 

 மூலிகையின் சக்தியால் இலட்சுமணனும் விழித்திட

 

 முகமலர்ந்த இராமன் அனுமனை பாராட்டிட

 

 எதிரிருக்கும் இந்திரஜித்திடம் மீண்டும் சண்டையே

 

 இலட்சுமணனின் அம்பு துளைத்தது மார்பையே

 

 இந்திரஜித் வீழ்ந்தான் குருதி கொட்டியே

 

 இச்செய்தி கேட்டு துடித்தாள் மண்டோதரியே

 

 தன் மகனை தாரைவார்த்தாள் இப்போரில்

 

 தன் கணவனே காரணமென்றால் மீளாத்துயரில்

 

 

 உறங்கியிருந்த கும்பனை போருக்கு எழுப்பிடவே

 

 ஓய்வெடுத்த தம்பியையும் விதியும் துரத்திடவே

 

 கடமையழைக்க புறப்பட்டான் சண்டையினை நடத்திட

 

 கடைசி காலமான உணர்ந்தான் போரில் உயிர் விட

 

 அடுத்தடுத்து இழந்தான் தமையனுடன் தம்பியே

 

 ஆதரவுக்கு எவருமில்லை நின்றான் தன்னந்தனியே

 

 தன்தங்கையின் செயலால் செய்தது எல்லைமீறியே

 

 தன் வினைப்பயன் தொடர்ந்தது முடிவினைத் தேடியே

 

 இராமனிடம் போர் புரிய வந்த முதல் நாள்

 

 இடரோடு தடுமாற்றம் கண்டது அந்த நாள்

 

 இன்று போய் நாளை வாவென ராமனும் உரைக்க

 

 இழந்தது அவமானமு டன் தனியாளாய் தவிக்க

 

 செய்ததெல்லாம் உணர்ந்திட்டு மண்டோதரியும் அழுதிட

 

 செய்வினை ஒன்றே ராவணனையும் சூழ்ந்திட

 

 மறுநாள் போரில் அம்பும் துளைத்திட

 

 மண்டோதரியின் ராவணன் நம் மண்ணில் சாய்ந்திட

 

 அசோகவனத்தில் சீதையின் மனமும் இன்புற

 

 அனுமனின் சேவையும் அமைந்ததே பயனுற

 

 

 கற்புக்கரசி அன்னையோ ராமனிடம் சேர்ந்தாள்

 

 கணவன் சொன்னதால் அக்னி பிரவேசமும் பூண்டாள்

தொடரும்)




கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,