மதுரை ஸ்பெஷல் கார தோசை

 மதுரை ஸ்பெஷல் கார தோசை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

பிரசித்தி பெற்ற மதுரை இந்த கார தோசைக்கும் ரொம்பவே ஸ்பெஷல்! டெய்லி ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்து போனவர்கள் விதவிதமான தோசைகளை சுட்டு சாப்பிடலாம். அந்த வகையில் சட்னி கூட தேவையில்லை, காரசாரமான மொறுமொறு கார தோசை இந்த முறையில் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்மதுரை கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி – மூன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பல் – 5, வர மிளகாய்  10, உப்பு – தேவையான அளவிற்கு, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தோசை மாவு – தேவையான அளவு.மதுரை கார தோசை செய்முறை விளக்கம்: 

தோசை சுட்டு அதன் மீது இந்த சட்னியை தடவி வேக வைத்து எடுத்தால் காரசாரமான கார தோசை ரெடி ஆகிவிடும். இதற்கு அதிக பொருட்கள் கூட நமக்கு தேவைப்படுவது இல்லை. ரொம்பவே வித்தியாசமான சுவையில் இருக்கக் கூடிய இந்த கார தோசை செய்ய தேவையான பொருட்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


அதனுடன் தோல் உரித்த பூண்டு பற்கள், வர மிளகாய் மற்றும் இந்த காரத்திற்கு தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி இந்த விழுதை சேர்த்து கலந்து விட வேண்டும். கொஞ்ச நேரம் மூடி வைத்தால் எண்ணெய் மேலே தெளிய இவற்றின் பச்சை வாசம் போய் சட்னி தயாராகிவிடும்.


அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து தோசை மாவை எடுத்து தோசை வார்த்து அதன் மீது இந்த கலவையை எல்லா இடங்களிலும் படும்படி தடவினால் 2 நிமிடம் மூடி வைத்தால் போதும். மொறுமொறு காரசாரமான மதுரை ஸ்பெஷல் கார தோசை தயார் ஆகிவிடும். இதற்கு சட்னி எதுவுமே தேவையில்லை, இருப்பினும் நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும் மற்றொரு முறையிலும் இதை செய்யலாம். ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி, பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்த பின்பு இதே போல தோசை வார்த்து அதன் மீது இதனை தடவி, இரு புறமும் வேக வைத்து எடுத்தால் மொரறுமொறு மதுரை ஸ்பெஷல் கார தோசை வேற லெவல்ல இருக்கும். இந்த இரண்டு முறையில் நீங்கள் விருப்பப்பட்ட எந்த முறையிலும் கார தோசை செய்து சாப்பிடலாம்.அது மட்டும் இல்லாமல் இன்னொரு வகையும் உண்டு. அம்மிக் கல்லில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஜீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். அதனுடன் ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். இவற்றுடன் 5 வர மிளகாய்களை சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்தால் தோசைக்கு தேவையான கார சட்னி தயார். இதை அப்படியே தோசையின் மீது தடவி வேக வைத்து எடுத்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஸ்டைலில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கார தோசை செய்து சாப்பிட்டு, வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,