வித்தியாசமான அரைத்து ஊற்றிய பருப்பு குழம்

 

வித்தியாசமான அரைத்து ஊற்றிய பருப்பு குழம்பு







தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 100 கிராம்

பூண்டு – 2

சீரகம் – 1 தேக்கரண்டி

தேங்காய் – 1 கப்

மிளகாய் வற்றல் – 3

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – தேவையான அளவு

பெருங்காயம் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பருப்பை நன்றாக கழுவி அதில் பூண்டு சேர்த்து குழைய வேக விட வேண்டும். இந்நிலையில் தேங்காய் , மிளகாய் வற்றல்,சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்னர் நன்கு வெந்து வந்த பருப்பை மசித்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் கலவையை மற்றும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதன் பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் எண்ணெய், கடுகு, ஒரு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதை கொதித்து வரும் குழம்பில் ஊற்றி அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான அரைத்து ஊற்றிய பருப்பு குழம்பு ரெடி.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி