பிரான்ஸிஸ் கிருபா

 அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா














தமிழின் தனித்தன்மை கொண்ட கவிஞர்களில் ஒருவரான ஜே.பிரான்ஸிஸ் கிருபா இன்று [16-09-2021] அன்று மாலை மறைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. பல்வேறு தீவிரமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக வந்தவர். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். மல்லிகைக் கிழமைகள்,சம்மனசுக் காடு,ஏழுவால் நட்சத்திரம்,நிழலன்றி ஏதுமற்றவன்,மெசியாவின் காயங்கள்,வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதைத் தொகுதிகளும் கன்னி என்னும் நாவலும் வெளியாகியிருக்கின்றன.
சற்றுமுன் பட்டுக்கோட்டை செல்வராஜ் என்னும் நண்பர் “அவன் இருளுக்குள் நிழல்போல கிடந்தான்” என்ற பிரான்ஸிஸ் கிருபாவின் வரியைச் சுட்டி “என்ன ஒரு வரி” என்று ஒரு வாட்ஸப் செய்தி அனுப்பியிருந்தார். அப்போது பிரான்ஸிஸ் இறந்துவிட்டிருந்தார் என அவருக்கு தெரியாது. சற்றுநேரத்தில் செய்தி வந்தது.
- ஜெயமோகன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி