வெறும் 15 நிமிடத்தில் அப்பள குழம்பு

 வெறும் 15 நிமிடத்தில் அப்பள  குழம்பு



வித்தியாசமாக வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் நான்கு அப்பளத்தை பொரித்து போட்டு இந்த அப்பள குழம்பை ஒரு முறை வைத்து தான் பாருங்களேன். சுட சுட சாதத்தோடு இந்த குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால், குண்டான் சோறு பத்தாது. அந்த அளவிற்கு இந்த குழம்பின் ருசி இருக்கும்.


முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 கப் அளவு எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் 4 லிருந்து 5 அப்பங்களை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பப்படம் அல்லது அப்பளப்பூ என்று சொல்வார்கள் அல்லவா நீள நீளமாக இருக்கும், அது இருந்தாலும் பொரித்து, இந்த அப்பளக் குழம்பு வைக்கலாம். சுவையாக இருக்கும். பொரித்த அப்பளங்கள் அப்படியே இருக்கட்டும்.


பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளிக் கரைசலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

கூடுமானவரை இந்த குழம்பை நல்லெண்ணையில் வைத்தால் இதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். 

எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் பொடியாக நறுக்கியது – 10 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து முதலில் எல்லா பொருட்களையும் நன்றாகப் பொரிய விடுங்கள்.

அதன் பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இவைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக குழம்புக்கு தேவையான அளவு அதாவது சாம்பார்பொடி – 2 டேபிள் ஸ்பூன், அளவு சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி, அடுத்தபடியாக ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் உப்பு காரம் சரி பார்த்துக்கொள்ளுங்கள். குழம்பை மூடி போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவேண்டும். பச்சை வாசனை அனைத்தும் நீங்கிவிடும்.


இறுதியாக பொரித்து வைத்திருக்கும் அப்பளங்களை இரண்டு மூன்றாக உடைத்து இந்தக் குழம்பில் போட்டு ஒரு முறை கலந்து விட்டு 2 நிமிடம் போல அப்பளங்கள் குழம்பில் ஊறினால் போதும். அடுப்பை அணைத்துவிடுங்கள். சுட சுட இந்த குழம்புடன், சுட சுட தட்டு நிறைய சாதம் போட்டு அப்படியே பிசைந்து சாப்பிட்டால் சொல்ல வார்த்தை இல்லை. உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. அப்ப தான் இதோட ருசி உங்களுக்கு தெரியும்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி