#குடும்பம்ஒருகதம்பம்(4 ) தொடர்) /அப்டி வாங்க வழிக்கு!/செல்வி சங்கர்

 

குடும்பம்ஒருகதம்பம் (4)


/அப்டி வாங்க வழிக்கு!/




செல்வி,

இன்னமே நான் ஆபீஸ்க்கு போகலை, எனக்கு மெஷின் மாதிரி இந்த லௌகீக வாழ்க்கை ரொம்ப போரடிச்சுப்போச்சு. நான் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிப் போகப்போறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒரு லாங் வீக் எண்டில் ஏதோ ஒரு ஞான நொடியில் என் கணவர் சொன்னதுதான் இது. அப்டியா.?மகிழ்ச்சி.!! எங்க போய் அந்த அர்த்தத்த தேடப்போறீங்க? நான் அப்டியே வடக்கே ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத் இப்டி ஷேத்ராடனம் போலாம்ன்னு இருக்கேன். ரொம்ம்ப சந்தோஷம்!! கெளம்புங்க. நீ மட்டும் தனியா பசங்க கூட இருந்துக்குவேல்ல.? ஓ..அதுக்கென்ன, நான் நல்லா சௌக்கியமா இருந்துக்குவேன், ஆமா, நீங்க எப்போ கெளம்புறீங்க.? லைட்டா ஜெர்க் ஆனார். என்ன இது ஒரு ரெஸ்பான்ஸும் இல்லாம எப்பக் கெளம்பறேனு கேக்குறா? நான் எப்போ வேணாலும் துண்டை உதறித் தோள் மேல போட்டுக்கொண்டு கெளம்பிருவேன். எனக்கு பத்து சப்பாத்தி, சப்ஜியும், காரசாரமா புளியோதரையும் செஞ்சு குடு. இது எதுக்கு? வழியில் சாப்பிடத்தான். டிரெய்ன்ல வரதெல்லாம் வாய்ல வைக்க முடியுமா? என்னங்க இது? வாழ்க்கை மேல பற்று வேணாம், போரடிக்குதுனு ரிஷிகேஷ்,ஹரித்வாருக்கு கெளம்புறீங்க.? வாய்க்கு ருசியா வேணும்ங்கற சாப்பாட்டு மேல உள்ள பற்றை விட முடியலையா.? ஹைய்யோ ஆமாம் செல்வி. என்னால அதை விட முடியல. வேணா ஒண்ணு செய்வோம், நீயும் எங்கூட வரியா.? எதுக்கு, அடுப்பு, குண்டான் சட்டி எல்லாம் எடுத்து வந்து ஹரித்வார்ல உங்களுக்கு சமைச்சுக் குடுக்கவா.? ஆமாம். அதுக்கு ஏன் நான் அங்கே வரணும்? இங்கேயே இருந்து சமைச்சுக் குடுக்கறனே.! ஆமால்ல.! சரி, போனவாரம் நீ செஞ்ச முறுக்கு காலியாகிடுச்சே. சாயந்தரத்துக்கு பஜ்ஜி பண்றேன்னு சொன்னியே, வாழைக்காய் இருக்கா, இல்ல வாங்கி வரவா.? /! #குடும்பம்ஒருகதம்பம்


செல்வி சங்கர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,