: இன்று அனைத்துலக முதியோர் தினம்.

 இன்று அனைத்துலக முதியோர் தினம்.


முதியோர் தினத்தை முன்னிட்டு அவர்கள் சார்ந்த தகவல்களை பார்க்கலாம்.


நாளை நமக்கும் வயதாகும் என்பதை மறந்து தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கும் அநாதை ஆஸ்ரமத்திற்கும் வழியனுப்பி வைக்கும் குழந்தைகள் நாளடைவில் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள்.


இவர்களிடம் எல்லாம் கேட்க வேண்டிய கேட்க கூடிய ஒரு கேள்வி இருக்கிறது? அதென்னவென்றால்,

உங்களின் நல்லது கெட்டதுகளை 20 வருடங்களுக்கு மேலாக சுமந்த பெற்றோர்களை ஏன் நீங்கள் சுமக்க மறுக்கிறீர்கள்?


வயசாக வயசாக இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க? அப்படியான கேள்வி இன்று பல குழந்தைகளின் மனதில் உள்ளது.


நானும் அதை தான் சொல்லுகிறேன்.ஏன் இப்படியெல்லாம் அவர்கள் தங்களின் முதுமை வயதில் செய்கிறார்கள் என்னும் குழப்பத்தை நீங்களே உங்கள் பெற்றோரிடம் அமர்ந்து உடம்பு எதுவும் செய்கிறதா ? இல்லை உங்களுக்கு வேறு எதுவும் தேவை உள்ளதா ? என்று கேட்டாலே முதியோர் இல்லங்களுக்கு செல்லும் முதியவர்களின்  எண்ணிக்கை குறைந்து விடும்.


முதலில் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு முதியவர்கள் என்ற சொல் வெறும் எண்ணிக்கையை மட்டுமே. குறிக்கிறது.


வெறும் எண்ணிக்கையை குறிக்காமல் உடலில் மனதில் பிரச்சினைகள் வருகின்றது என்றால் இளம்வயதில் குடும்பம் குழந்தைகள் என்று ஓடிவிட்டு தங்களுக்கு முடியவில்லையென்றால் கூட வெளியே சொல்லாமல் தங்களின் உடலை பராமரிக்க தவறியதன் விளைவாக இன்று 


பல முதியோர்களுக்கு கண் பார்வை கோளாறுகள், சர்க்கரை நோய்,இருதய பிரச்சினைகள்,காலில் ஆறாத புண்,மனழுத்தம்,வெறுமையின் காரணமாக கோபம்,காது கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.


இவற்றில் இன்று அதிகளவில் மறதி பலரை பாதிக்கும் விதமாக உள்ளது.90% நபர் மறதியால் அவதிப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு.

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அதிகளவில் தனிமைப்படுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார்கள்.


இப்படி முதுமையில் பலவற்றை சந்திக்கும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு  தொந்தரவு தருபவர்களாக தான் தெரிவார்கள்.ஏனென்றால் இன்றைய சூழ்நிலை வேலை தன் மனைவி தன் குழந்தை என்றொரு கட்டமைப்புக்குள் வைத்திருக்கிறது.தன் மனைவி தன் கணவன் தன் குழந்தை என்பதில் தன் அம்மா அப்பா என்பவர்கள் பாரமாக தெரிகிறார்கள்.


உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் அருகில் சென்று அமருங்கள்.அவர்களுக்கு எது தேவை எது தேவையில்லை எது பிடிக்கும் எது பிடிக்காது ஆசை கனவு அவர்களின் கடந்த கால நினைவுகள் இவற்றையெல்லாம் தெரிந்துக் கொள்ள முயற்சியுங்கள்.


அவர்களின் தேவையென்று சொன்ன அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.இவற்றில் எதாவது ஒன்றை பூரித்து செய்யுங்கள்.நம்ம பிள்ளை நமக்காக செஞ்சுருக்கு என்ற திருப்தியை தாருங்கள்.


பிறப்பை முடிவு செய்யும் போதே இறப்பை முடிவு செய்யும் வாழ்க்கையில் தான் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.


மீண்டுமொரு முறை அனைத்து தாத்தா பாட்டிகளுக்கு முதியோர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.- கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,