பறை இசைக்கருவியும், சந்திரிகாவும்

 பறை இசைக்கருவியும், சந்திரிகாவும்சந்திரிகா என்றால் பறை இசைதான் நமது நினைவுக்கு வரும்.

25 வயதான கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த  சந்திரிகா

பறை இசைக்கருவியோடு ஒன்றி 500-க்கும் மேற்பட்ட பறை இசை மற்றும் இதர  நாடகங்களை தமிழ்நாட்டில் அரங்கேற்றி இருக்கிறார். இவருடைய பெற்றோர்  பழனிச்சாமி, சாந்தமணி. தந்தை திரு. பழனிச்சாமி அவர்கள் தினக்கூலியாக பணி புரிகிறார்.


தனது கல்லூரி படிப்பில் இவர் பயின்ற வேதியியல் துறையில் 

தங்கபதக்கம் பெற்றுள்ளார்.


பல விழிப்புணர்வு  நாடகங்களை நடத்தி வரும் இவர்  

பல மாணவ, மாணவிகளுக்கு பறை இசை வகுப்பையும் நடத்தி வருகிறார்.

அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை;


படித்துக் கொண்டிருந்தபோது நாடகக்லையில் ஏற்பட்ட பற்றினாலும்  

மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் திரு. ராம்ராஜ் அவர்களின் தூண்டுதலினாலும்  நாடகம் பயின்று அவருடன் தமிழ்நாடு முழுவதும்  பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளதாக தெரிவிக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ‘நாற்காலி’, ’ கூந்தலில் வழியும் கனவுகள்’, ‘பெத்தவன்’ முதலான நாடகங்களை அவருடன் சேர்ந்து அரங்கேற்றம் செய்துள்ளதையும் அறிகிறோம். 'மிதக்கும் உடல்கள்’ என்ற இவரது நாடகம் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது அரங்கேறி அனைத்து தர மக்களையும் கவர்ந்துள்ளது.

இந்த நாடக பயணங்களின் போது இவருக்கு பறை இசைக்கருவி அறிமுகம் ஆகியதால் அதன் மேல் உள்ள காதலால் அதைப்பயின்றதாக தெரிவிக்கிறார்.இது பற்றி சந்திரிகா சொல்வதை கேட்போம்.

‘பறையில் பலவகைகள் உள்ளன. இந்த பறை இசைக்கருவி நாடகம் நடத்துவதற்கு  மட்டுமில்லாமல் இந்த  நாடகங்களின் பிண்ணனி இசைக்கும் உதவுகிறது. பறை ஆதித்தமிழரின் இசைக்கருவியாக இருக்கிற போதும் இது நம் மக்களிடம் பெரிதாக போய் சேரவில்லை என்பது வருத்தமான விஷயம்’ என்கிறார்.

மேலும் இவர் ‘அதற்கு  காரணம் நம் மக்கள் பறையை ஒரு அமங்கல இசைக்கருவியாக கருதி ஒதுக்கிவைத்துள்ளதே’ என்றார்.

இதை ஒரு காரணமாக ஏற்று கொள்ளமுடியாது என சொல்லும் அவர்  

இந்த பறை அன்றைய  மக்களின் வாழ்வில் பல இடங்களில் பயன்பட்டுள்ளது. 

நமது வரலாற்றை ஆராய்ந்தால் இது பற்றி தெரிய வரும், ஆகவே இந்த தொன்மை வாய்ந்த பறை இசைக்கருவியை  அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆவல் தனக்கு பிறந்ததாகவும் பறை மேல் உள்ள தன் காதலை தெரிவிக்கிறார்

மேலும் அவர், ‘இதற்காக பறை இசைப்பள்ளி மூலம் வார இறுதி வகுப்புகளை தொடங்கினோம். இந்த வகுப்பில் 7 வயது முதல் 65 வயது வரை பலரும் பயிற்சி எடுத்தனர். பல அரசு பள்ளிகளில் இலவசமாக பறை இசையை இலவசமாக 

கற்றுக்கொடுக்கிறோம்‘ என்றார். பறை இசைக்கருவியை முன்னிலை படுத்தி பல நாடகங்களை இவர் நடத்தியுள்ளார்.

பெண்விடுதலை, தீண்டாமை போன்ற கருத்துகள் மக்கள் அடைய வேண்டி அவர்களின்  விழிப்பணர்வுகளுக்காக  மக்கள் கூடும் பல முக்கியமான  இடங்களில் இவர் நடத்திய நாடகங்கள் பலரின் பாராட்டுகளை  பெற்றுள்ளது.


கஜா புயல் நிவாரணத்துக்காகவும் நாடகங்களை நடத்தியது மிகவும் சிறப்பு என சொல்லலாம். இது மட்டுமில்லாமல் கடவூரில் நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் பண்ணையிலும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது
திருப்பூர் தமிழ்பட்டறையிலிருந்து ‘சமூகப்பேரொளி ‘விருதும் தி ரோட்ராக்ட்  டிஸ்ட்ரிக் ஆர்கனைசேஷன் மூலமாக ‘தி இன்பேக்ட் மேக்கர் ஆப் த சொசைட்டி ‘என்ற விருதும் இந்த வருடத்தில்  பெற்றுள்ளார்

 சமீபத்தில் வெளிவந்த ‘செந்நாய் ‘ திரைப்படத்தில் இவர் பறை இசைத்து நடித்து எல்லா மக்களையும் கவர்ந்துள்ளார்.

இவரின் ஆசை கிதார். பியோனோ வாசிப்பது போல பறையையும் அனைவரும்

கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஆகவே பறை இசையை பரவலாக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்வேன் என்கிறார்.

இந்த கலையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல என்ன செய்யலாம் என்று அவரிடம் கேட்ட போது

‘எந்த ஒரு கலையோ மொழியோ வளர்ச்சியடைய அதி முக்கியமான விஷயம் அது நம்ம வீட்டுக்குள்ள  முதல்ல உபயோகிக்கப்பட வேண்டும், பேசப்பட வேண்டும்  மற்றும் கொண்டாடப்பட வேண்டும். இந்த ஆதி கருவியைப்பற்றிய விழிப்புணர்வை இந்த தலைமுறைக்கு கடத்தி வீட்டிற்குள்ளே  எடுத்துட்டு போக வைக்க வேண்டும்’ என்றார். 


அவரின் எண்ணம் போல் அவர் சாதிக்க சந்திரிகா அவர்களுக்கு பீப்பிள் டுடே சார்பாக  வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.


https://www.instagram.com/chandrikaparai/?hl=en

தொடர்புக்கு மின்னஞ்சல்: chandrikaparai@gmail.com

செல் பேசி : 8754106034


 -உமா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,