குடும்பம் ஒரு கதம்பம்(6) தொடர்/பொம்பளப்பிள்ள கட்டு செட்டா சிக்கனமா இருக்கணும்,/செல்வி சங்கர்

 குடும்பம் ஒரு கதம்பம்

(6) தொடர்/பொம்பளப்பிள்ள கட்டு செட்டா சிக்கனமா இருக்கணும்,


ஏங்க இந்தப் பதினைஞ்சு நாளா நம்ம வீட்டுச் சமையல்ல ஏதாச்சும் வித்தியாசம் தெரிஞ்சதா? ஹிண்டு சுடோகுவில் ஆழ்ந்திருந்த என் கணவரை வினவினேன்.. வித்தியாசம்ன்னா எப்டிக் கேக்கறே? டேஸ்ட்ல கூடக்குறைய? நீ என்னென்ன செஞ்சேன்னே மறந்து போச்சு. எப்படிச் சொல்ல.? சரி, இன்னிக்கு ரவா கிச்சடி செஞ்சேன்ல அது எப்படி இருந்துச்சி? ஏன் எப்பவும் போல நல்லாத்தான் இருந்துச்சி.. கத்தரிக்காய் சாம்பார், வெண்டைக்காய் கறி இதெல்லாம்.? எல்லாமே எப்போதும் போலத்தான் இருந்துச்சி, இப்ப எதுக்கு இந்த சர்வே எடுக்கறே.? லைட்ட்டா அவர் கடுப்பாகற மாதிரி தெரிஞ்சது. ரைட்டு. நாம சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிரலாம். வெங்காயம் இந்த வெலை விக்குதே, அதனால, இந்த ரெண்டு வாரமா நம்ம வீட்டுல சமையலில் வெங்காயமே போடலைங்க. அதான் டேஸ்ட் ஏதும் குறைஞ்சதான்னுகேட்டேன். அடடா இதுல என்ன.? எவ்வளவோ செலவாகுது ... இந்த வெங்காயத்துலதான் மிச்சமாகுதா என்ன.? ச்சே...ச்சே. அப்டில்லாம் இல்லைங்க, ஒவ்வொண்ணா நூறா ஒரேயடியா நூறா? வீடான வீட்டுல பொம்பளப்பிள்ள கட்டு செட்டா சிக்கனமா இருக்கணும், தூபரதண்டி செலவு செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிச் சொல்லி எங்கம்மா என்னை வளர்த்துருக்காங்க தெரியுமா.? சரி என்னம்மோ செய்ன்னு சொல்லிட்டு திரும்பவும் சுடோகு கண்டின்யூ பண்ணார். அப்ப பார்த்துதானா அந்த போன் வரணும்..? ஹலோ அக்கா, நான் தான் தாமரை பேசறேன்.(தம்பி மனைவி) சொல்லும்மா, என்ன விஷயம்..? ஹவுஸ் ஓனர் பொண்ணு நல்ல புடவைகள் கொண்டு வந்திருக்குக்கா.ஃபேன்ஸி டிசைன்ஸ். செம்ம டிரெண்டியா இருக்குக்கா.. நீங்க ஆபீஸ்க்கு கட்டிட்டுப் போக நல்லாருக்கும்.. புடவையான்னு கேட்டதுமே ஹிண்டுவில் இருந்து முகத்தை எடுத்து என்னை ஏறிட்டுப் பார்த்தார் அவர்.. விலையெல்லாம் எப்படிம்மா.? அது ஒண்ணும் அதிகமில்லக்கா.. 1000, 900, 750, 550 இந்த ரேஞ்சுலதான் இருக்கு. வாட்ஸப்ல போட்டோஸ் அனுப்பியிருக்கேன் பாருங்க...! நான் அஞ்சு நிமிஷம் முன்னால சொன்ன //ஒவ்வொண்ணா நூறா... ஒரேயடியா நூறா// //தூபரதண்டி செலவு செய்யப்படாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்துருக்காங்க// டயலாக்ஸ்லாம் மனசில வந்துச்சி. அக்கா, என்னக்கா யோசிக்கறீங்க..? வரீங்களா, இல்ல குடுத்தனுப்பவா..? இல்லம்மா, வேணாம்.. இப்போதே நிறைய புடவைகள் இருக்கு. அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி போனை அமர்த்தியவளை புன்னகையுடன் ஏறிட்டார் என் கணவர். அவர் என்னமோ ரொம்ப சாதரணமாதான் புன்னகைத்தார்.. எனக்குத்தான் மயிரிழையில் தப்பீச்சடீ செல்வீ என்பதுபோல இருந்துச்சி. #குடும்பம் ஒரு கதம்பம்
குடும்பம்ஒருகதம்பம்


செல்வி சங்கர்

Comments

selvishankar said…
மிக்க நன்றிங்க சார்.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,