ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டான் என்று எழுதுங்கள்

 ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டான் என்று எழுதுங்கள்”
ஜெயகாந்தன் பேசினாலே சர்ச்சையும் சலசலப்பும் உடன் பிறந்த விஷயங்களாகிவிடும்.
அப்படிப்பட்டவர் தமிழிலேயே பேசவேண்டும், எழுத வேண்டும் என்று சொல்கிறவர்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக ஒரு தகவல் பரவியிருந்த நேரம்.
2005 மே மாதம் 1 ஆம் தேதி. சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பதில் சொன்னார் ஜெயகாந்தன்.
“தமிழ் வேறு; நான் வேறா? தமிழை நான் பழித்தால் அது மல்லாந்து துப்பிக் கொள்கிற மாதிரி ஆகாதா? தமிழ் மீது படைப்பாளிகளுக்கு இருக்கும் சொந்தம் வேறு. மற்றவர்களுக்குத் தமிழ் தாய் என்றால் படைப்பாளிகளுக்குத் தமிழ் மனைவி.
நம்முடைய பெருமை நம் மீது மட்டும் இருக்கக் கூடாது. பிறரையும் நேசிப்பதாக இருக்க வேண்டும்.
அதற்காக மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னேன். அதை வேறு விதமாகப் புரிந்து கொள்ளவா சொன்னேன்? இதனால் சில சமயம் பேசாமலே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது.
இன்னும் பேசுவதற்குச் சீண்டுகிறார்கள். நான் யாரையும் புண்படுத்துவதற்காகப் பேசுவதில்லை. நான் அப்படிப் பேசிவிட்டால் அன்று முழுவதும் தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த மாதிரியான ஆத்மா நான்.
ஆறாவது அறிவால் வந்த வினையைப் பாருங்கள்.
என்னை நம்புகிறவர்களை நான் நம்புகிறேன். என் பிடிவாதம் என்னுடன் நின்று போகட்டும். என்னதான் பல மொழிகள் இருந்தாலும், அது என் தாய்மொழி போலாகுமா?
எந்த அச்சமும் எனக்கில்லை. பகைமை நிரந்தரமானதில்லை. வாழ்க்கையிலும் அப்படி இருக்கக்கூடாது. ஏதோ நான் நாய் என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அதைச் சிங்கம் என்று திருத்திக் கொள்ளுங்கள்.
ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டான் என்று எழுதுங்கள். சரியாகப் பேனா பிடிக்கிறவர்கள் இதை எழுதுங்கள்.
கோபம் ஒரு பருவத்தில் அழகு. கிழப்பருவத்திலே அது ஒரு நோய்.
என்னுடைய கோபத்தைத் தமிழ்ச் சமூகம் தவறாக நினைத்துவிடக்கூடாது.”- பொங்கியபடி பேசினார் ஜெயகாந்தன்.
-புதிய பார்வை – மே-16-2005 இதழ்
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,