லிப்ட் தமிழ்த்திரைப்படம்/ எனது கருத்துரை

 லிப்ட்

 

சமீபத்தில் OTTயில் (டிஸ்னி ஹாட் ஸ்டார்)பார்த்த படம்

 லிப்ட்

 அந்த படத்தைப்பற்றி எனது கருத்துரைதான் இது

விமர்ச னம் என்றால் அதற்கென தகுதி இருக்க வேண்டுமே

 

படத்தைப்பற்றி

ஐ.ட்டி துறையில் பல அடுக்கு மாடிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தினமும் பயன்படுத்தும் லிப்டில் பேய் வந்தால் எப்படி இருக்கும்? அது ஏன் வருகிறது என மிரட்டலாக உருவாகி உள்ள படம் தான் லிப்ட்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வரும்

கவின் (குரு )ஓரு சென்னை ஐ ட்டி கம்பெனியில் டீம் லீடராக  இணைகிறார். அதே கம்பெனியில் எச்.ஆராக வேலை பார்த்து வரும் ஹரினிக்கும் (அம்ரிதா ஐயர் ) இருவருக்கும் ஏற்கனவே ஒரு சின்ன கசப்பான சம்பவம் நடந்துள்ள நிலையில்  மோதலில் ஆரம்பித்த இவர்களது சந்திப்பு காதலாகுமா என்ற நிலையில் முதல் நாள் வேலையை இரவு 9.30 வரை இருந்து முடித்து விட்டு கிளம்ப நினைக்கும் குருவுக்கு அதன் பின் அந்த இரவில் அவர் சந்திக்கும் அமானுஷ்யங்கள் தான் கதை.


பிறகு இணையும் அம்ரிதா

இவர்கள்  மறு நாள் காலை வரை சந்தித்த அந்த  சம்பவங்கள் தான் கதையோட்டம்

 


படத்தின்  . நடிகர்கள்: கவின், அம்ரிதா, பாலாஜி வேணுகோபால்;

இசை: பிரிட்டோ மைக்கேல்;

ஓளிப்பதிவு: யுவா குமார்;

எடிட்டிங் மதன்

இயக்கம்: வினீத் வரபிரசாத்; வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி.

 

  லிப்டில் மாட்டிக் கொள்ளும் கவின் லிப்டை விட்டு காரை எடுத்துக் கிளம்ப கார் சுற்றி சுற்றி அதே இடத்துக்கு வந்து நிற்க, அதன் பின்னர் மீண்டு லிப்டில் ஏறும் கவின் அருகே ஷூ அணிந்த ஒரு கால் மட்டும் நடந்து கிட்டே வர என பேய்த்தனமாக படம் திகிலடைய  வைக்கிறது

. அதிலிருந்து தப்பிக்கும் கவின் அதே பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஹரினியை பார்க்க அவரை காப்பாற்ற போராடுகிறார்

இருவரும் சேர்ந்து அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற எவ்வளவோ முயல்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

அங்கிருந்த இரண்டு பாதுகாவலர்களும்கூட இறந்துவிடுகிறார்கள். அந்தக் கட்டடத்தில் என்ன இருக்கிறது, இவர்களை ஏன் அது தடுக்கிறது, இருவரும் தப்பினார்களா என்பது மீதிக் கதை

அதான்  கிளைமேக்ஸ். அந்த அமானுஷ்யம் என்ன என்பதை  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

.

ஒரே அலுவலகத்தில் மொத்தப் படத்தையும் முடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிக மெதுவாகத்தான் நகர்கிறது படம். ஆனால், சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு வேகமெடுக்கிறது

 .

கவின் செம ஸ்மார்ட்டா இருக்காரு, ஹீரோயின் அம்ரிதா நல்லா செய்திருக்கிறார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பேய்ப் படம் திகிலூட்டும் வகையில் இருப்பது ஓர் ஆச்சரியம்

நானே வீட்ல பார்த்துட்டு மிரண்டேன்

இன்னொரு  ஆச்சரியம்

 

யாருங்க இந்த கவின் என கேட்கவைத்து விட்டார்

கவினின் நடிப்பு. முதல் காட்சியிலிருந்தே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மனிதர். எந்த ஓர் இடத்திலும் உறுத்தல் இல்லாமல், தொடர்ந்து படத்தைப் பார்க்க வைக்கிறது இவரது நடிப்பு. படம் முடிந்த பிறகு வரும் பாடலில்கூட ஈர்க்கிறார் கவின். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் வரவு

.

நாயகியாக நடித்திருக்கும் அம்ரிதா ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் பிறகு சமாளித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து செல்கிறார்கள்

 சமீபத்தில் வெளியான பல காமெடி பேய் படங்கள் போல இல்லாமல் இந்த படம் ரியல் ஹாரர் படமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது

.
படத்தின் முதல் பாதி முழுக்க கவின் ஒன் மேன் ஆர்மியாக தானே தனியகா  அந்த ஐடி கம்பெனியின் லிப்டில் மாட்டிக் கொண்டு அத்தனை ரியாக்ஷன்களையும் முகத்தில் காட்டி நடித்து அசத்தி உள்ளார்.

பின்னர் அம்ரிதா தனது பங்கிற்கு அசத்தி இருக்காங்க என்பதை மறுக்க இயலாது

. இயக்குநர் வினீத் வரபிரசாத் டீசன்ட்டான ஹாரர் படத்தை கொடுத்துள்ளார்.

.


 

படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.

 அமானுஷ்யம், பேய் காட்சிகளில் இசையமைப்பாளர் மைக்கேல் பிரிட்டோ மிரட்டியெடுத்துவிட்டார். இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் இசை படத்துக்கான டெம்போவை கூட்டுகிறது

இவரின் இன்னா மயிலு பாடலுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

 

 

அதேபோல ஒளிப்பதிவு: யுவா குமார்;

ஒரு அலுவலகத்துக்குள்அதிலும் குறுகிய லிப்டுக்குள் காட்சிகளை எடுக்க வேண்டிய சவாலை ஒளிப்பதிவாளர் யுவா திறமையாக கையாண்டிருக்கிறார்காட்சிகளுக்கு அமைத்துள்ள நீலம் கலந்த டோனே அமானுஷ்யத்தை உணர வைக்கிறது

செம.பிரேம் பை பிரேம் டாப் கிளாஸ்

 

எடிட்டிங் மிகவும் அருமை. ஜி.மதன் அசர வைத்துள்ளார் கதையை நகர்த்த இவரின் பணி அசாத்தியம்

. கடைசியாக , படம் ரொம்பவே பொறுமையா போவது தான் மைனஸ் என நினைக்க வைக்கிறது

அந்தக் கட்டடத்தில் இருந்து கவின்  தப்பிக்க முயற்சிப்பது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே இருக்கிறது.புதுசா அவருக்கு ஏதும் ஐடியா தோணலியானு நம்மை கேட்க வைக்கிறது

அம்ரிதா வந்து சேர்ந்த பிறகும் அதே கதைதான்

இது படத்தின்  சுவாரஸ்யத்தைக் குலைக்க வைக்கிறது

அப்படியே மவுசாலே( நான் desk top computerla parthen)  பட இறுதிக்காட்சிக்கு போய் கிளைமாக்ஸ் என்ன வென பார்த்துடலாம் என தோண வைச்சது

 

.

அந்தக் கட்டடத்தில் இருக்கும் பேய்கள், பழிவாங்க விரும்புகின்றன என்பது தெரிய வர  ஆனால், அன்றுதான் வேலைக்குச் சேர்ந்த குருவையும் அதற்கு சில நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த ஹரிணியையும் பேய்கள் துரத்துவது ஏன் என்று புரியவில்லை.

இயக்குனரைதான் கேட்க வேண்டும்

ஒரு பேய் படத்துக்கு இரண்டே கால் மணிநேரம் என்பது அதிகம்பேய் பயமுறுத்தும் காட்சிகளை குறைத்துதிரைக்கதை ஓட்டையில் லாஜிக் பூசியிருந்தால் லிப்ட் மெருகேறியிருக்கும்

ஆனா இயக்குனர் எல்லா வற்றையும் நாமே அனுமானிக்க விட்டு விடுகிறார்

 

வேறு படம்னா ஒரு மனதத்துவ டாக்டர் அல்லது ஒரு மந்திரவாதி அல்லது

பூசாரி இவங்க வந்து நம்மை டார்ச்சர் பண்ணியிருப்பாங்க

 

ஐடி ஊழியரக்ளுக்கு கொடுக்கப்படும் வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சல் குறித்து இந்த படம் பேசுகிறது என்பதை நாம் உணராலாம்

 

 

திரைக்கதையும்  எடிட்டிங்கும் படத்திற்கு வசனத்தேவையில்லாமல் படத்தை  நகர வைக்கிறது

 

இதற்காக இயக்குனர் வினீத் வரபிரசாத்அவர்களை பாராட்ட வேண்டும்

 

.படம்  தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டியது

 டிவியில்/system la  பார்க்க அவ்வளவு எஃபெக்ட்டாக இல்லை என்பது உண்மை

 ஒடிடி ரிலீசாக வந்தது ஒரு குறை என சொல்வேன்


அந்த காலத்தில் The CAR னு ஓரு ஆங்கிலப்படம் பார்த்தேன்

அந்த கார் எல்லோரையும்  கொல்லும்

கார்ல யாரும் இருக்க மாட்டாங்க

அப்படி ஒரு திரில்லர் .அந்த படத்தை பார்த்த பிறகு காரை பார்த்தால் பயம் வந்ததது

அது போல இந்த லிப்டும்

.

. --உமாதமிழ்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,