அப்பாயின்ட்மென்ட் கேட்ட பிடிஆர்.. உடனே வழங்கிய நிர்மலா சீதாராமன்

 

அப்பாயின்ட்மென்ட் கேட்ட பிடிஆர்.. உடனே வழங்கிய நிர்மலா சீதாராமன்சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான்தான், அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார் தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி. சி. பட்வாரி உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிர்மலா சீதாராமன்-பிடிஆர் சந்திப்பு இதனிடையேதான், சென்னையில் வைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அப்போது பிடிஆர், நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் அப்போது வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்கவில்லை. மதுரையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் பாஜக-திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளாத குறையாக கருத்து பரிமாற்றங்களை செய்து வந்தனர். இந்த நிலையில் பிடிஆர்-நிர்மலா சீதாராமன் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது டுவிட்டர் பக்கத்தில், விளக்கம் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் சென்னையில் இருப்பதை நான் அறிந்து கொண்டதும், அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டேன். அவரும் உடனடியாக மிகவும் தன்மையோடு நேரம் வழங்கினார்.

நான் நிதியமைச்சராக பதவியேற்றதற்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார். அவரது அன்பான வாழ்த்திற்கு நானும் நன்றி தெரிவித்தேன். ஜிஎஸ்டி கவுன்சிலில் அவர் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தேன். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,